‘நான் Car’ல ஷூட்டிங்கிற்கு வந்தது வடிவேலுக்கு புடிக்கல.. ‘ : பிரபல நடிகர் Open Talk..!
Author: Rajesh19 March 2023, 8:30 pm
தமிழ் சினிமாவில் கவுண்டமணி – செந்தில்க்கு அடுத்தபடியாக காமெடி நடிகராக மிக பிரபலமாக திகழ்ந்து வந்தவர் நடிகர் வடிவேலு. ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றவர். சில வருடங்களுக்கு முன், எதிர்பாராத விதமாக, 24 ஆம் புலிகேசி படத்தில் ஏற்பட்ட பிரச்சனையால், சினிமாவில் நடிக்க தடை விதித்து இவருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது.
சில நிகழ்ச்சிகளில் பங்கேற்ற வடிவேலு, தான் சினிமாவில் நடிக்காமல் இருப்பது பெரும் வலியையும் வேதனையையும் கொடுப்பதாக கூறி கலங்கி வந்தார். பின்னர், தடையை நீக்கியதற்கு பின், மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்து, படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில், இவர் கதாநாயகனாக நடித்து வெளியான நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் வெளியாகி சுமாரான விமர்சனத்தை பெற்றது.
சந்திரமுகி 2, மாமன்னன் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக, நடிகர் வடிவேலு குறித்து சக நடிகர் நடிகைகள் நெகட்டிவான கருத்துக்களை தங்களது பேட்டிகளில் கூறி வருகின்றனர். அந்த வகையில், வடிவேலு அவர்களுடன் நிறைய படங்களில் நடித்த நடிகர் ஜெயமணி வடிவேலு பற்றி கூறியுள்ள விஷயம் வைரலாகி வருகிறது.
அவர் கூறியுள்ளதாவது, நானும் அவரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள். பங்காளி என அழைத்துக்கொள்ளும் அளவிற்கு நெருக்கமானவர்கள் தான். ஆனால், ஒரு ஷூட்டிங்கிற்கு காரில் நான் சென்று இறங்கியதை பார்த்து அவர் பொறாமைபட்டார். உடன் இருந்தவர்களும் வடிவேலுவிடம், பாருங்க பெரிய நடிகர் மாதிரி கார்’ல வந்து இறங்குறாரு என கூறியுள்ளார்கள். இந்த சம்பவத்தை அவர் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.