குடும்பத்தோடு குத்தாட்டம் போட்ட கொட்டாச்சி… மகளை விட மனைவி கிளி மாதிரி இருக்காங்களே!

Author:
7 October 2024, 11:28 am

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவராக பார்க்கப்பட்டு வருபவர் தான் நடிகர் கொட்டாச்சி. இவர் பல்வேறு திரைப்படங்களில் காமெடி வேடங்களிலும் குணசத்திர கதாபாத்திரங்களிலும் கூட்டத்தில் ஒரு காமெடி நடிகனாகவும் நடித்து பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டார்.

manasvi kottachi

பல்வேறு திரைப்படங்களில் சின்ன சின்ன காமெடி வேடங்களில் நடித்து வந்த கொட்டாட்சி வடிவேலுவை விட சிறப்பாக நடித்ததாக கூறி வாய்ப்புகள் கிடைக்காமல் செய்துவிட்டார் வடிவேலு. வாய்ப்புகள் கிடைக்காமல் வெளியேற்றப்பட்டார். இதனிடையே பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்காமல் போனதால் திரையுலகை விட்டு ஒதுங்கினார்.

ஆனால் கொட்டாச்சிக்கு கிடைக்காத வரவேற்பு அவரது மகள் மானஸ்விக்கு கிடைத்தது. ஆம், மகள் மானஸ்வி நயன்தாரா நடிப்பில் வெளிவந்த இமைக்கா நொடிகள் படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

kottatchi

முதல் திரைப்படத்திலேயே ஏகோபித்த ரசிகர்களின் வரவேற்பை பெற்ற மானஸ்விக்கு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. மகளின் மூலம் தனது சினிமா கணவையும் லட்சியத்தையும் தற்போது கொட்டாச்சி அனுபவித்து வருகிறார்.

ஆம், தனக்கு கிடைக்காத அங்கீகாரமும், மதிப்பும், புகழும், பெயரும் மகளின் மூலம் தனக்கு கிடைத்ததாக பல பேட்டிகளில் கூட அவர் கூறியிருக்கிறார். அவளுக்கு நடிக்கும் வாய்ப்புகள் வந்த பிறகு எங்களது வாழ்க்கை தரமும் உயர்ந்தது என கொட்டாட்சி பல பேட்டிகளில் கூறியிருக்கிறார்.

kottachi

இதையும் படியுங்கள் :அடுத்த விவாகரத்து நீங்க தான்… ஷாலினியின் செயலால் அஜித் ரசிகர்கள் அதிருப்தி – வைரல் வீடியோ!

இந்நிலையில் கொட்டாச்சி தன்னுடைய மகள் மானஸ்வி மற்றும் மனைவியுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் மகள் மானஸ்வியை காட்டிலும் அவரது மனைவி அழகில் கிளி மாதிரி மிகவும் அழகாக இருப்பதாக நெட்டிசன்ஸ் கமெண்ட் செய்து கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த வீடியோ தற்போது வைரலாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து அழகான குடும்பத்திற்கு வாழ்த்துக்கள் என கூறி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ:

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!