‘ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை இருந்தவரை திருமணம் செய்ய காரணம்’ மதுரை முத்துவின் மறுபக்கம்..!
Author: Udayachandran RadhaKrishnan18 December 2022, 4:15 pm
சின்னத்திரையில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் மதுரை முத்து. கலக்கப்போவது யாரு, அசத்தபோவது யாரு, காமெடி ஜங்ஷன் போன்ற பிரபல நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் அவ்வப்போது, மேடைப் பேச்சாளராகவும், பட்டிமன்ற நடுவராகவும் இருந்துள்ளார். இப்போது விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் பங்குபெற்று தனது நகைச்சுவையை வெளிக்காட்டி வருகிறார். இவர் திரைப்படங்களில் சின்னச்சின்ன கதாபாத்திரங்களிலும் நடித்து இருக்கிறார்.
மதுரை முத்துவின் மனைவி பெயர் லேகா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தார்கள். எதிர்பாராத விதமாக லேகா கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கார் விபத்தில் உயிரிழந்தார். பின் தனது 32வது வயதில் மனைவியின் தோழியான பல் மருத்துவர் நீத்து என்பவரை மதுரைமுத்து மறுமணம் செய்துகொண்டார். இதனை பலரும் விமர்சித்த போதிலும், மதுரை முத்து தன் இரண்டு மகள்களுக்காக தான் திருமணம் செய்தார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில் தன் முதல் மனைவி ஏற்கனவே திருமணம் ஆனவர் என்று மதுரை முத்து கூறியுள்ளார்.
அண்மையில் தனது முதல் மனைவி குறித்து ஒரு பேட்டியில் பேசிய மதுரை முத்து, “என் முதல் மனைவிக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இருந்தது. கணவர் இல்லாமல் அவர் படும் கஷ்டத்தை கண்டு வருத்தப்பட்டேன், நான் உங்களை திருமணம் செய்துகொள்ளலாமா என கேட்டேன். இரண்டாவது திருமணம் என்பதால் இருவீட்டாரும் சம்மதிக்கவில்லை, பல எதிர்ப்புகளுடன் தான் நாங்கள் திருமணம் செய்தோம்” என கூறியுள்ளார்.