“எங்கள ஒதுக்கி அவமானப்படுத்தி.. புதுசா வந்தவங்கள..” வடிவேலுவை புரட்டி எடுத்த முத்துக்காளை
Author: Udayachandran RadhaKrishnan15 January 2023, 5:00 pm
தமிழ் சினிமாவில் கவுண்டமணி – செந்தில்க்கு அடுத்தபடியாக காமெடி நடிகராக மிக பிரபலமாக திகழ்ந்து வந்தவர் நடிகர் வடிவேலு. ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றவர். சில வருடங்களுக்கு முன், எதிர்பாராத விதமாக, சில காரணங்களுக்காக, சினிமாவில் நடிக்க தடை விதித்து இவருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது.
பின்னர், தடையை நீக்கியதற்கு பின், 4 வருடங்களுக்கு பிறகு, மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்து, படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில், இவர் கதாநாயகனாக நடித்து வெளியான நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் வெளியாகி சுமாரான விமர்சனத்தை பெற்றது. இப்படத்தின் தோல்விக்கு காரணம் வடிவேலுவுடன் சேர்ந்த இந்த கால காமெடி நடிகர்கள் தான் என்று பலர் விமர்சித்தனர்.
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன், சிங்கமுத்து, முத்துக்காளை உள்ளிட்ட பல நடிகர்கள் வடிவேலு காம்போவில் அவருக்காகவே நடித்து கொடுத்தனர். தற்போது அவர்களை ஒதுக்கி அவமானப்படுத்திவிட்டு தற்போது சின்ன நடிகர்களுடன் நடிக்க ஆரம்பித்தது தான் நாய் சேகர் ரிட்டர்ன்ஸின் தோல்விக்கு காரணம் என்று முத்துக்காளை சமீபத்தில் தெரிவித்துள்ளார்.
நாங்கள் எல்லோரும் வடிவேலுவுக்காக நடித்தோம். ஆனால் இப்போது அவருடன் நடிக்கும் நடிகர்கள் தாம் வளரவேண்டும் என்று நினைத்து வருகிறார்கள். வடிவேலுவாக இருந்தாலும் பிடிக்கவில்லை என்றால் தூக்கி எறியக்கூடிய மனநிலையில் மக்கள் இருக்கின்றனர் என்று முத்துக்காளை காட்டமாக தெரிவித்துள்ளார்.