ஒரு வேலை சாப்பாட்டிற்கே திண்டாடிய யோகி பாபு…. இன்றைய சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

Author: Shree
25 July 2023, 10:38 am

தமிழ் சினிமாவை பொறுத்தவரை தற்போது முன்னணி காமெடி நடிகர் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் நடிகர் யோகி பாபு தான். ரஜினி, அஜித், விஜய் என முன்னணி தமிழ் நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். ஏராளமான படங்களில் நடித்து வரும் யோகி பாபு, ஒரு படத்தில் ஒரு காட்சியில் ஆவது தோன்றிவிடுவார். இவரின் டைமிங் காமெடிக்காக ஏராளாமான ரசிகர்கள் உள்ளனர்.

தற்ப்போது LGM மற்றும் ஜவான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதறகக அவர் மற்ற காமெடி நடிகர்களை காட்டிலும் அதிகம் சம்பளம் வாங்குவதாக தகவல்கள் கிடைத்து வருகிறது. யோகி பாபு குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட செய்யாறு பாலு ” ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கைரை ” என்ற கதையாக இன்று தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் இல்லாத பட்சத்தினால் வேறு வழியில்லாமல் யோகி பாபுவின் காமெடி பார்க்கவேண்டிய கட்டாயத்தில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

சந்தானமும் போய்ட்டாரு, சூரி போய்ட்டாரு யாருமில்லாததால் யோகி பாபுவின் காமெடி திரையில் பார்க்கும்போது ரசிக்கும்படியாகவோ சிரிப்பை வரவைப்பது போன்றோ இல்லை. மேலும் படத்தில் நடிக்கும்போது நான் தான் ஹீரோ என கூறிவிட்டு அதன் பின்னர் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் தன் பெயரை சொல்லி விளம்பரப்படுத்தவேண்டாம் என கூறுகிறாராம். இதனால் தயாரிப்பளர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்து நஷ்டத்தை சந்திப்பதாக அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்றைய தவிர்க்க முடியாத காமெடி நடிகர்களில் ஒருவராக இருக்கும் யோகி பாபு தற்போது கார், பங்களா வீடு, நிலங்கள், ஊர் மக்களுக்கு கோவில் என கிடுகிடுவென வளர்ந்துவிட்டார். தற்போது அவரது சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதன் படி யோகி பாபுவின் முழு சொத்து ரூ 40 கோடி முதல் ரூ.70 கோடி இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் இதற்கான எந்த ஒரு அதிகார பூர்வ ஆதாரங்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயமாக பார்க்கப்படுகிறது. .

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!