ஐயோ சாமி வேணாம்…. சூரிக்கு போட்டியா சிக்ஸ் பேக் வைக்க போராடும் யோகி பாபு – நக்கலடிக்கும் நெட்டிசன்ஸ்!
Author: Shree7 June 2023, 5:25 pm
தனது விடாமுயற்சியாலும், அயராது உழைப்பினாலும் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக மக்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்து பிரபலம் ஆனவர் நடிகர் யோகி பாபு. இவர் ரஜினி, அஜித், விஜய் என முன்னணி தமிழ் நடிகர்களின் படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றார். குறிப்பாக நயன்தாராவுடன் கோலமாவு கோகிலா படத்தில் ஜோடியாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். அதன் மூலம் இவரது மார்க்கெட் உச்சத்திற்கு உயர்ந்தது.
தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்து வரும் யோகி பாபு, வெளியாகும் ஒவ்வொரு படத்திலும் ஒரு காட்சியில் ஆவது தோன்றிவிடுவார். இவரின் டைமிங் காமெடிக்காக ஏராளாமான ரசிகர்கள் உள்ளனர். பிஸியான நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகி பாபு, கடந்த 2020ஆம் ஆண்டு பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் கடந்த சில வருடங்களாக கோலிவுட்டின் முன்னனி காமெடி நடிகராக யோகி பாபு தான் இருந்து வந்தார். ஆனால், தற்போது அவரையே மிஞ்சிவிட்டார் நடிகர் சூரி. விடுதலை படத்தில் உடல் எடை குறைத்து சூர்யா போன்று ஸ்லிம் பிட் ஹீரோவாக மாறிவிட்டார்.
இதனால் தற்போது நடிகர் யோகி பாபு சூரிக்கு போட்டியாக ஜிம்மில் கடுமையாக ஒர்கவுட் செய்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாக… ஐயோ அண்ணே உங்களுக்கு இதெல்லாம் செட் ஆகாது தயவு செஞ்சி உடம்பை குறைச்சிடாதீங்க அப்பறோம் ரொம்ப பீல் பண்ணுவீங்க என நக்கலாக அட்வைஸ் கொடுத்துள்ளனர் நெட்டிசன்ஸ்.