உங்களுக்கு இவ்ளோவ் கியூட்டா குழந்தை இருக்கா…?லைக்ஸ் அள்ளும் ஜாங்கிரி மதுமிதா!

Author: Shree
13 March 2023, 4:42 pm

ஜாங்கிரி மதுமிதா என தமிழ் சினிமா ரசிகர்களையே பிரபலமானவர் நடிகை மதுமிதா. விஜய் விஜய் தொலைக்காட்சியில் லொல்லு சபா எனும் நகைச்சுவை தொடரில் நடித்து கெரியரை துவங்கி பலருக்கும் பரீட்சியமனார்.

அதன் பின் சன் தொலைக்காட்சியில் சின்னபாப்பா பெரியபாப்பா போன்ற எண்ணற்ற தொடரிலும் நடித்துள்ளார். தமிழ் திரையுலகில் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் நடிகர் சந்தானத்தின் ஜோடியாக தேனடை என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார்.

அதன் பின்னர் ராஜா ராணி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜில்லா, காக்கி சட்டை உள்ளிட்ட பல திரைப்படங்களில் காமெடி ரோலில் நடித்துள்ளார். இவர் தனது உறவுக்கார மாமாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

ஒரு அழகான மகன் இருக்கிறான். இந்த இந்நிலையில் மகனுடன் எடுத்துக்கொண்ட கியூட்டா போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளி நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

  • sundar c openly talks about nayanthara in mookuthi amman sets நயன்தாரா இப்படிலாம் செய்வாங்கனு எதிர்பார்க்கல- உண்மையை போட்டுடைத்த சுந்தர் சி!