சூட்டிங் ஸ்பாட்டில் அஜித் செய்த காரியம்… துணை நடிகையின் அம்மாவால் வெளிவந்த ரகசியம்; அதிர்ந்து போன படக்குழு..!
Author: Vignesh11 January 2024, 7:10 pm
தமிழ் சினிமாவில் 90களில் பிடித்தமான காமெடி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை பிரியங்கா. இவர் வடிவேலு, கவுண்டமணி, செந்தில், சந்தானம் உள்ளிட்ட பட காமெடி நடிகர்களுடன் பல காமெடிகளில் துணை நடிகையாகவும் பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும், ரஜினி, அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களின் படத்திலும் துணை கதாபாத்திரத்தில் பிரியங்கா நடித்து தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். சமீபத்தில், நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட இவர் நடிகர் அஜித் குமார் பற்றி பேசியுள்ளார்.
அதாவது, அஜித் எப்பவும் சூப்பர் அவர் எனக்கு அண்ணன் மாதிரி. ஒரு படத்தில் நடிக்கும் போது தொடர்ந்து சூட்டிங் பண்ணிக்கிட்டு இருந்தாங்க, திடீர்னு பார்த்தா அஜித்தை காணோம். எல்லோரும் அவர் எங்கே என தேடிட்டு இருந்தாங்க, சரி அவரை காணும் கொஞ்ச நேரம் பிரேக் விடலாம்னு சொன்னாங்க..
அப்ப நான் வந்து என்னோட அம்மாகிட்ட உட்கார்ந்த போது, எங்கம்மா சூட்டுக்கு போகலையானு கேட்டாங்க இல்லம்மா அஜித்த காணோம் எங்கே போயிருக்காருன்னு தெரியல, அப்படின்னு அம்மா கிட்ட சொன்னேன். அப்போ எங்க அம்மா அப்படியா இருந்தா படுத்துட்டு இருக்காரு பாரு அப்படின்னு சொன்னாங்க, அஜித் ஒரு துணிய மூஞ்சுல போட்டு புல்லு மேல படுத்து தூங்கிட்டு இருந்தாரு. யார்கிட்டையும் சொல்லதிங்கனு எங்க அம்மாகிட்ட சொல்லிட்டு படுத்துருக்காரு” என்று கலகலப்பாக பேசியுள்ளார்.