நம்பர் 1 நடிகர்னு நம்பி ஏமாந்துட்டோம்… கொடுத்த காசு திருப்பி கொடுங்க- விநியோகிஸ்தர் வேதனை!

Author: Shree
19 August 2023, 6:48 pm

தோழா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இயக்குனர் வம்சி பைடிபல்லி அவர்களின் இயக்கத்தில் தமிழ் திரையுலகின் டாப் நடிகரான தளபதி விஜய் நடிப்பில் ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் வாரிசு. கடந்த ஜனவரி 11ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓரளவுக்கு வசூலையும் குவித்தது.

இப்படத்தில் விஜய் ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து இருந்தார். இப்படத்திற்கு தமன் இசையமைத்து இருந்தார். இப்படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது. ரிலீஸ் ஆனது முதல் அமோக வரவேற்பை பெற்ற வாரிசு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை குவித்தது. ரூ. 200 கோடி பட்ஜெட்டில் உருவான திரைப்படம் ரூ. 170 கோடி மட்டுமே வசூலித்து தோல்வியை தழுவியது. இப்படம் விஜய் படம் என்ற எதிர்பார்ப்பில் தான் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தாமல் ஓரளவுக்கு வசூல் ஈட்டி சமாளிக்க முடிந்தது.

ஆனால், இப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்து ஆஹா ஓஹோ என்றெல்லாம் ஆளாளுக்கு பேசி படத்தை நன்றாக விளம்பரம் செய்தனர். ஆனாலும் ஒன்னும் வேளைக்கு ஆகவில்லை. இப்படத்தை பெரிதும் நம்பி வாங்கிய விநியோகிஸ்தர்களுக்கு ஏமாற்றத்தை மட்டுமே கொடுத்தது. இந்நிலையில் வாரிசு படத்தை வாங்கி பெரும் நஷ்டம் அடைந்த கேரளா விநியோகிஸ்தர் ராய் அகஸ்டின் நடிகர் விஜய்க்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், வாரிசு படத்தால் தனக்கு மிகப்பெரும் தொகை நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகவும் எனவே தான் கொடுத்த கூடுதல் அட்வான்ஸ் தொகையை திருப்பி கொடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் தான் கொடுத்த பணத்திற்கு ஜிஎஸ்டி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்திருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். கேரளாவில் வாரிசு திரைப்படம் ரூ. 13 கோடி வசூலித்ததாக கூறப்பட்டது. ஆனால் வெறும் ரூ. 6 கோடி மட்டுமே வசூலித்ததாக அதிர்ச்சி தகவல் ஒன்று தற்போது கிடைத்துள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 597

    1

    1