நயன்தாரா போட்ட கண்டிஷன்… தலையில் துண்டை போட்ட விக்னேஷ் சிவன் : மொத்தமும் போச்சே!!!

Author: Udayachandran RadhaKrishnan
14 February 2023, 8:31 pm

நயன்தாரா விக்னேஷ்சிவன் ஜோடி கடந்த வருடம் திருமணம் செய்தனர். அதற்கு முன்னவே அவர்கள் பதிவு திருமணம் செய்தது இரட்டைக் குழந்தை விவகாரத்தில் வெளியானது.

அவர்களின் சர்ச்சை சற்று ஓய்ந்த நிலையில், விக்னேஷ் சிவன் அஜித்தை வைத்து AK62 படம் எடுக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கான நடிகர், நடிகைகள் தேர்விலும் ஈடுபட்டு வந்தார் விக்கி. அதன்படி, வில்லனாக அரவிந்த சாமி நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். அதோடு நகைச்சுவை நடிகர் சந்தானமும் இப்படத்தில் முக்கிய ரோலில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.

இப்படி படு ஜோராக நடைபெற்று வந்த ஏகே 62 பணிகள் கடந்த மாத இறுதியில் நிறுத்தப்பட்டு, அப்படத்தில் இருந்து இயக்குனர் விக்னேஷ் சிவனை அதிரடியாக நீக்கிவிட்டனர். அவருக்கு பதில் மகிழ் திருமேனி தற்போது ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

இதற்கு காரணம் விக்னேஷ் சிவன் தயார் செய்த கதை அஜித்துக்கும் தயாரிப்பு நிறுவனமான லைக்காவுக்கும் பிடிக்க வில்லை. இதன் காரணமாக அவரை படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இன்னொரு தகவலும் பரவி வருகிறது.

ஏகே 62ல் விக்னேஷ் சிவன் தூக்கப்பட்டதற்கு நயன்தாரா தான் காரணம் என கூறப்பட்டுள்ளது. ஏனென்றால், அஜித்துடன் நயன்தாராவைத்தான் நடிக்க வைக்க வேண்டும் என விக்னேஷ் சிவன் முடிவு செய்திருந்தார்.

ஆனால் லைகா நிறுவனம், திரிஷாவை நடிக்க வைக்க சொல்லியுள்ளனர். நோ சொன்ன விக்கிக்கு, ஐஸ்வர்யா ராய், காஜல் என கைக்காட்ட ஒத்துக்கொள்ளாத விக்கி, கடைசியில் பாலிவுட் நடிகை ஒருவரை ஒப்பந்தம் செய்யும் நேரத்தில் அவரையும் வேண்டாம் என சொல்லிவிட்டார்.

இதனால் விக்கியின் பிடிவாதத்தால் கடுப்பான லைகா மற்றும் அஜித் தரப்பு, விக்கியை நீக்கியுள்ளனர். இந்த முடிவுக்கு நயன்தாராவின் பிடிவாதம் தான் காரணம் என விக்னேஷ் சிவன் புலம்பி வருகின்றனார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 506

    0

    0