கோயிலுக்குள் செருப்பணிந்து சென்ற நயன்தாரா… வெடிக்கும் சர்ச்சை!

Author: Rajesh
9 January 2024, 5:32 pm

மலையாள குடும்பத்தை சேர்ந்தவரான நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார். பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்தபின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா. அப்படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி தெறிக்க கிளாமர் காட்டி சொக்கி இழுத்தார்.

பின்னர் சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம், பட வாய்ப்பு இல்லாமை என இருந்து வந்த நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் நானும் ரவுடி தான். அப்படத்தில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார். அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

nayanthara

வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார் நயன்தாரா. அவ்வப்போது குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட அழகான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார். மகன்களுக்கு “உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் ” என தன் பெயரையும் நயன்தாரா பெயரையும் உயிர் , உலகம் என்பதன் அடிப்படையில் வைத்துள்ளனர்.

தொடர்ந்து சில சிக்கல், படுதோல்விகள், கணவருக்கு கைநழுவிப்போன வாய்ப்புகள் என சோகத்தில் மூழ்கிய நயன்தாரா கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வந்து தொடர்ந்து வேளைகளில் கவனம் செலுத்தி வருகிறார். ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்து விட்டார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே 9 ஸ்கின் என்ற சருமம் சார்ந்த products தொழில் ஒன்றை ஆரம்பித்தார். பின்னர் நாப்கின் தொழிலை ஆரம்பித்தார்.

தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நயன்தாரா தற்போது டெஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். குமுதா என்ற ரோலில் நயன்தாரா நடிக்க மாதவன், சித்தார்த் ஆகியோர் கதாநாயகன்களாக நடித்துள்ளனர். இப்படத்தை ஒய்நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு காஞ்சிபுரம் ஜுரகரேஸ்வரர் கோவிலில் நடைபெற்றது.

இதில் நடிகை நயன்தாராவும் கலந்துகொண்டார். இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் நயன்தாராவை காண கோவில் முன் குவிந்தனர். பின்னர் நயன்தாரா ஷூட்டிங் முடிந்து கோவிலில் இருந்து வெளியே வரும்போது அங்கு குவிந்திருந்த ரசிகர்களை பார்த்து கையசைத்துவிட்டு கேரவனுக்கு சென்றார். அதன் பின்னர் ரசிகர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகியது.

இதில் நடிகை நயன்தாராவும் கலந்துகொண்டார். இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் நயன்தாராவை காண கோவில் முன் குவிந்தனர். பின்னர் நயன்தாரா ஷூட்டிங் முடிந்து கோவிலில் இருந்து வெளியே வரும்போது அங்கு குவிந்திருந்த ரசிகர்களை பார்த்து கையசைத்துவிட்டு கேரவனுக்கு சென்றார். அதன் பின்னர் ரசிகர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். இந்நிலையில் இந்த விவகாரத்தை அடுத்து நயன்தாரா பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம், நயன்தாரா கோவிலுக்குள் செருப்பு அணிந்து சென்றுள்ளார். இது பெரும் சர்ச்சைக்குள்ளாகி பலரும் கண்டங்கள் தெரிவித்து வருகிறார்கள். நயன்தாரா முன்னதாக திருமணம் ஆன புதிதில் கணவர் விக்னேஷ் சிவனுடன் திருப்பதி கோவிலுக்கு சென்ற போது கூட செருப்பு அணிந்து சென்று பெரும் எதிர்ப்புகளுக்கு ஆளாகி பின்னர் மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.

  • A man fraud in the name of Sunny Leone சன்னி லியோன் பெயரில் இப்படி ஒரு மோசடியா? அதிர்ந்த அரசு!
  • Views: - 409

    0

    0