“தே**யா பையன்”… ட்ரைலரில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய சொல் படத்தில் நீக்கம் – சற்றுமுன் லோகேஷ்!

Author: Shree
18 October 2023, 4:19 pm

விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் வரும் 19ஆம் தேதிக்கு திரைக்கு வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். லியோ படம் வெளியீட்டு தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து பல்வேறு தடங்கல்களை சந்தித்து வருகிறது. டிரெய்லர் வெளியீட்டின் போது ரோகிணி தியேட்டரில் இருக்கைகளை ரசிகர்கள் உடைத்து சேதப்படுத்தியது, இசை வெளியீட்டு விழா கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது என பல்வேறு தடைகள் ஏற்பட்டன.

அதுமட்டுமில்லாமல், லியோ படத்திற்கு அதிகாலை 4 மற்றும் 7 மணிக்கு சிறப்பு காட்சிகளை திரையிட அனுமதிக்க வேண்டும் என்ற படக்குழுவின் கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்தது. இதனால், படக்குழுவினர் மட்டுமின்றி நடிகர் விஜய் ரசிகர்களும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். மேலும், தயாரிப்பாளர்களுடன் ஏற்பட்ட மோதலில் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கான ரோகிணியில் லியோ திரைப்படம் வெளியிடப்படாதது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை உருவாக்கியுள்ளது. இப்படி பல்வேறு சர்ச்சைகளையும் தாண்டி படம் நாளை ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிரபல தொலைக்காட்சி ஒன்றிற்கு நேர்காணல் பேட்டி கொடுத்தார். அப்போது பேசிய அவர், ட்ரைலரில் இடம்பெற்ற அந்த சர்ச்சைக்குரிய சொல் படத்தில் இருந்து நீக்கிவிட்டோம் என கூறினார். (அதாவது, ட்ரைலரில் விஜய் மனைவியாக நடித்துள்ள திரிஷாவிடம், “‘எவனோ ஒரு தே**யா பையன் என்னை மாதிரி’ இருக்கான்னு ஆளாளுக்கு என்ன போட்டு உயிரை எடுத்தா நான் என்னடி பண்ணுவேன்? என கோபத்துடன் பேசுவார். அது தான் அந்த சொல்).

மேலும் பேசிய லோகேஷ், படத்தின் ஷூட்டிங் போது விஜய் கொடுத்த சுதந்திரத்தால் தான் படம் முழுக்க முழுக்க என் பாணியில் எடுக்கப்பட்டது. விஜய் பெரிதாக எந்த ஒரு மாற்றமும் செய்ய சொல்லவில்லை. மேலும் படத்திற்கு தேவைப்படுவதால் தான் அதுபோன்ற வன்முறை காட்சிகள் இடம் பெறுகிறது. அண்ணன் விஜய்க்கும் எனக்கும் இப்படத்தில் புரிதல் நன்றாக இருந்தது. எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை. படம் சிறப்பாக உருவாக முழுக்க முழுக்க விஜய் தான் காரணம் என லோகேஷ் கனகராஜ் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

  • Simran Slams Actress Talked About Aunty Roles Aunty கேரக்டருக்கு இது எவ்வளவோ மேல்… சிம்ரனை காயப்படுத்திய நடிகை இவரா?