திருமண ஆசை வந்துடுச்சு.. கல்யாண Update கொடுத்த ஷெரின்: எப்போன்னு தெரியுமா..?

Author: Vignesh
21 April 2023, 7:30 pm

தமிழ் திரையுலகில் துள்ளுவதோ இளமை படத்தில் நடித்ததன் மூலம் பல ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் ஷெரின். ஆனால் தொடர்ந்து தமிழ் திரையுலகில் தாக்கு பிடிக்க முடியாமல் திரையுலகில் இருந்து ஒதுங்கினார் ஷெரின். மேலும் அவரின் உடல் வாகும் அதிக எடை கொண்டவராக மாற்றியது.

இந்நிலையில் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஷெரின் மீண்டும் தனெக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை ஒதுக்கிக்கொண்டுள்ளார்.

sherin - updatenews360

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அறிமுகமான போதும், ஷெரீன் உடல் எடை அதிகரித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது படிப்படியாக உடல் எடை குறைந்துவந்தார் ஷெரின்.

sherin - updatenews360

நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஷெரின் மேலும் ஸ்லிம் ஆகி பழைய கனவு கன்னியாக தற்போது சமூகவலைத்தளங்களில் வலம் வர தொடங்கியுள்ளார்.

sherin - updatenews360

இந்நிலையில், நீண்ட இடைவேளைக்கு பிறகு தான் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கம்பேக் கொடுத்துள்ளார். சமீபத்தில் சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் கலந்துரையாடும் போது ஒரு ரசிகர் திருமணம் குறித்து கேட்டுள்ளதற்கு ஷெரின், ஜாதகப்படி அக்டோபர் மாதத்தில் நடக்கும் என சொல்லி இருக்கிறார்கள் எனவும், தன்னுடைய கல்யாணத்தை சீக்கிரம் பிளான் பண்ணி இருக்கேன் என தெரிவித்துள்ளார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!