“இந்த மனசுதான் சார் கடவுள்”.. சத்தமே இல்லாமல் குக் வித் கோமாளி பிரபலத்திற்கு உதவி செய்த விஷால்..!

Author: Vignesh
10 February 2023, 10:30 am

விஜய் தொலைக்காட்சியின் பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக்பாஸ் கடந்த ஜனவரி 22ம் தேதி முடிவுக்கு வந்தது. இதனை தொடர்ந்து அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி 105 நாட்கள் ஒளிபரப்பாகி இருக்கிறது.

இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் 4வது சீசனை தொடங்கிவிட்டார்கள்.

விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகாரமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. முதல் இரண்டு சீசன்களில் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது சீசனும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

cook with comali - updatenews360

Cook With Comali நிகழ்ச்சியின் புரொமோ எப்போதும் வரவேற்பு அதிகம், இதில் கோமாளிகளாக சிலர் நாம் ஏற்கெனவே பார்த்தவர்கள் உள்ளனர், இதில் புதிய கோமாளிகளும் உள்ளார்கள்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வருகிற ஜனவரி 28-ந் தேதி முதல் ஒளிபரப்பானது. கடந்த சீசன்களில் கோமாளியாக வந்து கலக்கிய புகழ், குரேசி ஆகியோர் இந்த சீசனில் கலந்துகொண்டனர். புதிய கோமாளிகளாக ஜி.பி.முத்து, ஓட்டேரி சிவா, சிங்கப்பூர் தீபன், ரவீனா தாகா ஆகியோரை கோமாளிகளாக களமிறக்கி உள்ளனர்.

otteri siva-updatenews360

இதில் புதிதாக வந்த ஓட்டேரி சிவா CWC -வில் குடித்துவிட்டு வருவதால் நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டதாக இணையத்தில் தகவல்கள் வெளியான நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஓட்டேரி சிவா இது குறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் அவர், ” தனக்கு குடி பழக்கம் இல்லை என்றும், உணவு எவ்ளோ கொடுத்தாலும் தான் சாப்பிடுவேன் என்றும், நான் குறுகிய காலத்தில் பிரபலம் ஆனதால் பொறாமையில் இது போன்ற தவறான கருத்துக்களை பரப்பி வருவதாக கூறியுள்ளார்”.

otteri siva-updatenews360

“தன்னை CWC-வில் இருந்து நீக்கவில்லை என்றும், அவர்கள் தன்னிடம் விரைவில் அழைக்கிறோம் என்று தான் சொன்னார்கள் எனவும், தன் மீது சுமத்தும் பொய்யான கருத்துக்களை நம்ப வேண்டாம்” என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

vishal - updatenews360

இந்நிலையில் நடிகர் விஷால், ஓட்டேரி சிவாவை அழைத்து தன்னுடைய அலுவலகத்தில் பலவற்றை விசாரித்து இங்கேயே சாப்பிட்டு தூங்கிக்கோ என்றும், வாய்ப்பு வந்து சம்பாதித்தால் யாருகிட்டயும் கொடுத்திறாத என்று ஆறுதலாக, நடிகர் விஷால் கூறியுள்ளார். சின்ன கலைஞர்களை டாப் நடிகர்கள் மதிக்காத சூழலில் விஷால் செய்த செயல் பலரின் பாராட்டை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

  • srikanth tells about the incident when he was watching dragon movie டிராகன் படத்துக்கு போனேன், கடுப்பேத்திட்டாங்க- ஆதங்கத்தை கொட்டிய நடிகர் ஸ்ரீகாந்த்…