இது தேவையா..? வாயை விட்டு தர்ம அடி வாங்கிய ‘குக் வித் கோமாளி’ பிரபலம்..! ரியாக் செய்த நெட்டிசன்கள்..!
Author: Vignesh3 October 2022, 5:30 pm
குக் வித் கோமாளி பிரபலமான புகழ் தனது மனைவியிடம் அடிவாங்கும் வீடியோவை ஷேர் செய்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் புகழ். விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு உள்ளிட்ட மற்ற நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.
சின்னத்திரை மட்டுமின்றி சினிமாவிலும் நடித்து வருகிறார் புகழ். இந்நிலையில் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி தனது நீண்ட நாள் காதலியான பென்ஸியாவை திண்டிவனம் அருகே உள்ள தீவனூர் விநாயகர் ஆலயத்தில் வைத்து புகழ் திருமணம் செய்து கொண்டார்.
அவர்களின் திருமணத்தில் சினிமா பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். கடந்த வருடமே இருவரும் கோவை பெரியார் படிப்பகத்தில் திருமணம் செய்து கொண்டதாக போட்டோக்கள் வெளியானது. அதனை தொடர்ந்து சென்னையில் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சியையும் நடத்தினார்.
திருமணம் ஆகி ஒரு வாரமே ஆன நிலையில் தனது மனைவி தனக்கு ஆயில் மசாஜ் செய்து விடும் வீடியோவை ஷேர் செய்துள்ளார். அதில் தேவையில்லாமல் பேசி தனது மனைவியிடம் அடி வாங்கியுள்ளார் புகழ்.
தலைக்கு ஆயில் மசாஜ் செய்துவிடும் புகழின் மனைவி, தலை வலி இப்போ எப்படி இருக்கு என கேட்கிறார். அதற்கு சரியாகிவிட்டது என்று கூறுகிறார் புகழ். கல்யாணத்திற்கு முன்பு தலைவலித்தால் யார் ஆயில் மசாஜ் செய்து விடுவார் என கேட்கிறார், அதற்கு கல்யாணத்திற்கு முன்பு எங்கே தலைவலி வந்தது என கேட்கிறார் புகழ்.
இதனால் கடுப்பாகும் புகழின் மனைவி அவரது தலையிலேயே போடுகிறார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், புகழிடம் இது தேவையா என கேட்டு வருகின்றனர். திருமணம் ஆகி ஒரு மாதத்திற்குள்ளேயே புகழ் தனது மனைவியிடம் அடி வாங்கும் வீடியோ இணையத்தை திணறடித்து வருகிறது.