குக் வித் கோமாளி அஷ்வினுக்கு திருமணம்… Heartbreak ஆகி அழும் பெண் ரசிகைகள்!

Author: Shree
18 July 2023, 5:46 pm

விஜய் தொலைக்காட்சிக்கு ஏதேனும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள வாய்ப்பு கிடைத்தாலும் அந்த நபர் ஓரிரு ஆண்டுகளிலேயே வெள்ளித்திரையில் மிகப்பெரிய நடிகர்கள் ஆகிவிடலாம் என்பது காலத்திற்கு தகுந்த உண்மை சம்பவமாக பார்க்கப்படுகிறது. அந்த லிஸ்டில், சிவகார்த்தகியேன், மாகாபா, புகழ், ரக்ஷன், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்டோர் உதாரணம்.

இளைமையான ஆண் அழகனாக ஹேண்ட்ஸம் தோற்றத்தில் கல்லூரி படிக்கும்போது நடிப்பின் மீதிருந்த ஆர்வத்தினால் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களுக்கான ஆடிஷன்களில் கலந்து கொண்டு ரெட்டை வால் குருவி, நினைத்து தெரிந்த மனமே தொடர்களில் நடித்தார்.

அதன் பிறகு ஓ காதல் கண்மணி , ஆதித்ய வர்மா போன்ற படங்களில் துணை வேடங்களில் நடித்து வந்தார். மீட் க்யூட், செம்பு , என்ன சொல்ல போகிகிறாய் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். அப்போது தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியிட்டு மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். குறிப்பாக அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அதிகம் பெண் ரசிகைகள் கொண்ட இளம் ஹீரோவாக பார்க்கப்பட்டார் அஷ்வின்.

இந்நிலையில் 32 வயதாகும் அஷ்வினுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாம். ஆம், பிரபல தயாரிப்பாளர் மகளை அஷ்வினுக்கு நிச்சயம் செய்து வைத்திருப்பதாகவும். விரைவில் திருமணம் என்றும் செய்தி வெளியாகியுள்ளது. இதை கேள்வி பட்டதும் அவரது பெண் ரசிகைகள் மிகுந்த கவலையோடு Heartbreak போட்டு கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!