குக் வித் கோமாளியில் யாரும் எதிர்பார்க்காத ‘அந்த’ பிரபலம்.. இவங்க வந்தா பிரச்சனையாச்சே..!

Author: Vignesh
28 March 2024, 12:56 pm

விஜய் டிவியின் மிகவும் பிரபலமான அனைவரையும் கவர்ந்த நிகழ்ச்சி என்று சொல்லும் அளவிற்கு பெயர் பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி, நான்கு சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. தற்போது, ஐந்தாம் சீசனுக்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, நடுவர்களை அறிமுகப்படுத்தும் வகையில் பிரமோ வெளியிடப்பட்டு இருந்தது.

அதில், தாமு மற்றும் நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோர் மாஸாக விமானத்தில் இருந்து இறங்கி வருவது போல் காட்டப்பட்டது. தற்போது, கோமாளிகளை அறிமுகப்படுத்தும் பிரமோ வெளியாகி இருக்கிறது. தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவின் முதலில் தொகுப்பாளராக ரக்சன் மற்றும் மணிமேகலை ஆகியோர் வருகின்றனர்.

அதன் பின்னர், குரேஷி மற்றும் சுனிதா ஆகியோர் கோமாளிகளாக அறிமுகப்படுத்தப்படுகின்றனர். அதன் பின்னர் யாரும் எதிர்பார்க்காத வகையில், விஜய் டிவியில் ராமர் வருகிறார். மேலும், யாரெல்லாம் வரப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்நிலையில், போட்டியாளர்களின் லிஸ்டில் வனிதாவின் மகள் ஜோவிகாவின் பெயர் அடிபட்டு வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் ஐயோ இந்தம்மா பிக் பாஸிலேயே அந்த போடு போட்டுச்சு இங்கேயும் வந்திருச்சா என்று கமெண்ட்களில் தெரிவித்து வருகின்றனர்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!