என்னை Cringe, Over acting-னு சொல்றவங்களுக்கு இதான் பதில் – சிவாங்கி கொடுத்த பதிலடியால் ஷாக்கில் ஹேட்டர்ஸ்..!

Author: Vignesh
16 December 2022, 1:30 pm

விஜய் டிவியில் பிரபல ரியாலிட்டி ஷோவில் முக்கியமானது குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனை விட 2வது சீசனுக்கு ரசிகர்கள் ஏராளம். அதில் புகழ், சிவாங்கி, பாலா, மணிமேகலை என அனைத்து கோமாளிகளும் ரசிகர்களின் வயிற்றை பதம் பார்த்து விட்டனர். அந்த அளவுக்கு அனைவரும் ரசிக்கும் படியாக இந்த நிகழ்ச்சி அமைந்தது.

Sivaangi-updatenews360-2

இதன்மூலம் புகழ்பெற்ற சிவாங்கி, புகழ் ஆகிய இருவருமே பெரிய திரைக்கு சென்றுவிட்டனர். சிவாங்கி அண்மையில் டான் திரைப்படத்தில் நடித்திருந்தார். புகழ், எதற்கும் துணிந்தவன், என்ன சொல்ல போகிறாய் போன்ற திரைப் படங்களில் காமெடியனாக நடித்து விட்டார். தற்போது ஹீரோவாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இதை தொடர்ந்து காசேதான் கடவுளடா என்ற படத்தில் கண்ணன் இயக்கத்தில் சிவாங்கி ஒரு முக்கியமான ரோலில் நடித்து வருகின்றார். அதே போல சமீபத்தில் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற படத்தில், வடிவேலு நடிப்பில் வெளியான படத்தில் ஷிவாங்கி நடித்து இருந்தார்.

sivaangi - updatenews360

என்னதான் பல லட்சம் பாலோவர்கள் இருந்தாலும் ஷிவாங்கியை விமர்சிக்கும் கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது. இவர் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றத்தில் இருந்தே இவருக்கு ரசிகர்களுடன் சில ஹேட்டர்ஸ்களும் உருவாகினர் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

மேலும், ஷிவாங்கியை Cringe என்று பலர் விமர்சித்து வருவதும் உண்டு. ஆனால், அதைப்பற்றி எல்லாம் அவர் பெரிதாக கவலைப்படுவது இல்லை. இப்படி ஒரு நிலையில் இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் சில கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

sivaangi - updatenews360

அப்போது ரசிகர் ஒருவர் ‘உங்களை Cringe,Over actingனு சொல்றவங்களுக்கு உங்களின் Reaction என்ன ?’ என்று கேள்வி கேட்க, ஷிவாங்கி சிரிக்கும் எமோஜியை போட்டு ‘இது தான் என் Reaction ‘என்று பதில் கொடுத்துள்ளார்.

  • vaadivaasal movie shooting starts on august ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?