முத்தம் கேட்டு டார்ச்சர் பண்ணிய கூல் சுரேஷ்.. சார் “ப்ளீஸ் என்னை விட்ருங்க” என்று கதறிய இளம் பெண்..!
Author: Vignesh17 February 2023, 7:45 pm
தமிழ் சினிமாவில் வில்லன், காமெடி என்று சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து ஓரளவு பிரபலமாக இருந்தவர் கூல் சுரேஷ். நடிகர் சிம்புவின் நண்பராகவும், ரசிகராகவும் தன்னை காட்டிக் கொண்டார்.
வெந்து தணிந்தது காடு படத்தின் ப்ரோமோஷனுக்காக களம் இறங்கி வெந்து தணிந்தது காடு.. சிம்புக்கு வணக்கத்தை போடு என கூவு கூவுனு கூவி பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.

வெந்து தணிந்தது காடு படத்தின் பிரமோஷனில் ஆரம்பித்து தற்போது வரை திரையரங்குக்கு சென்று படத்தை பார்த்து கூல் சுரேஷ் விமர்சனத்தை தெரிவித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் நடிகைகளை காதலிப்பதாக கூறி கூட ஒரு சர்ச்சையை ஏற்படுத்தினார். இதனிடையே, பகாசுரன் படத்தில் சிறிய ரோலில் கூல் சுரேஷ் நடத்து உள்ளார்.
பகாசுரன் படம் இன்று தியேட்டரில் வெளியாகிய நிலையில், கூல் சுரேஷ் படத்தை பார்த்துவிட்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய போது, வாத்தி படத்தினை பார்த்துவிட்டு வந்த ஒரு இளம் பெண்ணிடம், முத்தம் கொடுக்கும்படி கேட்டு உள்ளார்.
ஆனால், அந்த இளம் பெண் வேண்டாம் சார் விட்ருங்க என்று கெஞ்சியும் விடாமல் பேசி இருக்கிறார். அதன்பின் அந்த பெண்ணிடம் நான் கேட்டு முத்தம் கொடுக்கவில்லை, இது தான் படம் சொன்ன கருத்து இந்தம்மாக்கு புரிந்துவிட்டது என்று பேசிய வீடியோ தற்போது சர்ச்சையாகி வைரலாகி வருகிறது.