என்னங்க பிக் பாஸ், பிக் பாஸுனு.. ஜிங் ஜிங்னு ஆடிட்டு.. பெண்களை தவறாக பேசிய கூல் சுரேஷ்..!

Author: Vignesh
3 October 2023, 3:13 pm

இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்கி உள்ளது.

bigg-boss-7 - updatenews360

இந்த சீசனில் கூல் சுரேஷ், அக்‌ஷயா உதயகுமார், ஐஷூ, விஜய் வர்மா, ஜோவிகா விஜயகுமார், பிரதீப் ஆண்டனி, பவா செல்லதுரை, விஷ்ணு விஜய்,அனன்யா ராவ், பூர்ணிமா ரவி, சரவண விக்ரம், வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், மாயா கிருஷ்ணா, விசித்ரா, நிக்ஸன், மணி சந்திரா, ரவீனா தாஹா என மொத்தம் 18 பேர் போட்டியாளர்களாக பங்கேற்று உள்ளனர்.

இந்த சீசனில் தான் முதல்முறையாக பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என இரண்டு வீடுகள் இடம்பெற்றுள்ள நிலையில், இரண்டாவது வீடு சிறைச்சாலை போன்ற விதிகளுடன் இயங்க தொடங்கியுள்ளது.

bigg boss 7

இந்தநிலையில், தமிழ் சினிமாவில் வில்லன், காமெடி என்று சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து ஓரளவு பிரபலமாக இருந்தவர் கூல் சுரேஷ். நடிகர் சிம்புவின் நண்பராகவும், ரசிகராகவும் தன்னை காட்டிக் கொண்டார். வெந்து தணிந்தது காடு படத்தின் ப்ரோமோஷனுக்காக களம் இறங்கி வெந்து தணிந்தது காடு.. சிம்புக்கு வணக்கத்தை போடு என கூவு கூவுனு கூவி பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.

cool suresh-updatenews360

தற்போது பிக் பாஸ் 7ல் என்ட்ரி கொடுத்துள்ள கூல் சுரேஷ் உள்ளே நுழைந்தவுடன் கண்டன்ட் கொடுக்க ஆரம்பித்துவிட்டார். முன்னதாக பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து கூல் சுரேஷ் பேசிய பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதில் ‘என்னங்க பிக் பாஸ், என்ன பிக் பாஸு.. சின்ன சின்ன பொண்ணுங்கள கூட்டிகிட்டு வந்து, அரைகுறை ஆடையில் ஆட விடுறீங்க’ என பெண்களை தவறாக பேசியிருக்கிறார். இவர் பேசிய இந்த வீடியோ தற்போது நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

  • Rape with the actress in the shooting.. Attempt to commit suicide படப்பிடிப்பில் நடிகையிடம் அத்துமீறல்.. தற்கொலை செய்ய முயற்சி : இயக்குநரின் காம முகம்!