பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை பண்ணுங்க..கொந்தளித்த கூல் சுரேஷ்..!
Author: Selvan21 December 2024, 9:05 pm
பிக் பாஸ் 8 “வீடு இல்லை நரகம்”கூல் சுரேஷ் விமர்சனம்
பிக் பாஸ் சீசன் 7-ல் போட்டியாளராக கலந்து கொண்ட கூல் சுரேஷ் சமீபத்தில் வணங்கான் பட விழாவில் கலந்து கொண்டார்.அப்போது பேசிய அவர் பிக் பாஸ் சீசன் 8-யை தடை பண்ண வேண்டும் என கொந்தளித்து பேசியுள்ளார்.இது ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்களை சந்தித்த அவர்,பிக் பாஸ் நிகழ்ச்சி ரொம்ப மோசமான நிகழ்ச்சி மக்களை முட்டாள் ஆக்கி கொண்டிருக்கிறது.அதுவும் குறிப்பாக இந்த சீசன் ரொம்ப கேவலமாக போகிறது,விஜய்சேதுபதி தெரியாமல் வந்து மாட்டிக்கொண்டார் என கூறியுள்ளார்.
மேலும்,இந்த சீசனில் ஆபாசம் எல்லைமீறி போய்க்கொண்டிருக்கிறது,இதனால் பொதுமக்கள் பலர் புகார்களை தெரிவித்து வருகின்றனர்.சமீபத்தில் போட்டியாளர் ராணவ் கை உடைந்தது,அவருக்கு கை உடையாமல் வேறு எதாவது இடத்தில் அடிபட்டிருந்தால்,அவருக்கு எப்படிங்க குழந்தை பிறக்கும் என பேசியுள்ளார்.
இதையும் படியுங்க: தினம் தினமும் இனி வேட்டை தான் …விடுதலை 2 முதல் நாள் வசூலை பாருங்க..!
இதனால் தமிழக அரசு உடனே முன்வந்து,இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் அது வீடு இல்லை ஒரு நரகம் என விமர்சித்துள்ளார்.இந்த செய்தி பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.