ஹெலிஹாப்டர் உடன் தியேட்டருக்கு வந்த கூல் சுரேஷ் – வைரலாகும் வீடியோ..!

Author: Shree
30 March 2023, 10:42 am

இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சிம்பு கௌதம் கார்த்திக் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் பத்து தலை. ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் மணல் மாஃபியாவை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது. இப்படத்தில் சிம்பு ஏஜிஆர் என்கிற டான் கேரக்டரில் நடித்துள்ளார்

.

சுமார் 450-க்கும் மேற்பட்ட திரைகளில் இப்படம் வெளியிடப்பட்டுள்ளது. சிம்பு ரசிகர்கள் இப்படத்தை மாபெரும் ஹிட் படமாக்கவேண்டும் என்பதற்காக காலையிலேயே தியேட்டர் முன் குவிந்து பட்டாசு வெடித்து, பால் அபிஷேகம் செய்து , மேள தாளகளுடன் இப்படத்தின் ரிலீசை கொண்டாடினர்.

இந்நிலையில் சிம்புவின் தீவிர ரசிகரான நடிகர் கூல் சுரேஷ், ‘வெந்து தணிந்தது காடு சிம்புக்கு வணக்கத்த போடு’ என்ற வசனத்தை பேசி சமூக வலைத்தளத்தில் பிரபலமானார். பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த சாக்லேட் படத்தின் மூலம் அறிமுகமான கூல் சுரேஷ் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். சில வருடங்கள் படவாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்த கூல் சுரேஷ் தற்போது வெள்ளித்திரையை காட்டிலும் சோஷியல் மீடியாவில் பயங்கர ஃபேமஸ் ஆகி வருகிறார்.

குறிப்பாக முதல் நாள் காட்சிகளுக்கு இவரது ரிவியூ ஹைலைட்டாக இருக்கும். மாமனிதன் படத்தை பார்த்துவிட்டு பிரஷ் செய்துக்கொண்டே ரிவியூ சொன்னார். பொன்னியின் செல்வன் படத்திற்கு குதிரையில் வந்தார். பின்னர் பத்து தல படம் பார்க்க வீட்டை விற்றாவது ஹெலிகாப்டரில் வருவேன் என ஆவேசமாக பேட்டி கொடுத்திருந்தார்.

ஆனால், தற்போது கையில் பொம்மை ஹெலிகாப்டர் உடன் வந்து அதை பறக்கவிட்டபடியே பத்து தல FDFS பார்க்க வந்துள்ளார் கூல் சுரேஷ். பொம்மை ஹெலிகாப்டர் எடுத்து வந்த அவரை தியேட்டரில் இருந்த ரசிகர்கள் சூழ்ந்துகொண்டனர். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாக நெட்டிசன்ஸ், ” ஒரு புத்திசாலியாலதான் மத்தவங்கள லூசு ஆக்க முடியும் “என கிண்டலடித்து வருகிறார்கள்.

  • Rape with the actress in the shooting.. Attempt to commit suicide படப்பிடிப்பில் நடிகையிடம் அத்துமீறல்.. தற்கொலை செய்ய முயற்சி : இயக்குநரின் காம முகம்!