சிம்புவுக்காக தொகுப்பாளருடன் நடந்த உச்சகட்ட சண்டை.. நடுக்கடலில் விழுந்த Cool Suresh..!
Author: Vignesh28 March 2023, 12:50 pm
வெந்து தணிந்தது காடு படத்திற்கு குரல் கொடுத்த கூல் சுரேஷுக்கு அப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஐபோன் ஒன்றையும் பரிசாக வழங்கி உள்ளார்.
நடிகர் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்திற்கு மக்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட நடிகர் கூல் சுரேஷும் ஒரு காரணம். சிம்புவின் தீவிர ரசிகனான அவர், தான் செல்லும் இடமெல்லாம் ‘வெந்து தணிந்தது காடு… வணக்கத்த போடு’னு சொல்லி வந்தார். அவரின் இந்த டயலாக் பாப்புலர் ஆனதோடு, படத்தின் மீதான ஆர்வத்தையும் ரசிகர்கள் மத்தியில் எழச்செய்தது.
இந்நிலையில், பத்து தல படத்திற்காக கூட ஹெலிகாப்டரில் வந்து விமர்சனம் செய்ய இருப்பதாக கூல் சுரேஷ் திட்டமிட்டுள்ளாராம்.
இந்நிலையில் பிரபல youtube சேனலுக்கு கூல் சுரேஷ் பேட்டி அளித்துள்ளார். நடுக்கடலில் நடந்த இந்த பேட்டியில், தொகுப்பாளர் சிம்புவை வைத்து தன்னுடைய விளம்பரத்திற்காக கூல் சுரேஷ் இப்படி செய்து வருகிறார் என ரசிகர்கள் பேசுகிறார்கள் என்று கேட்க முதலில் பொறுமையாக பேசிக்கொண்டிருந்த கூல் சுரேஷ், ஒரு கட்டத்தில் தொகுப்பாளருடன் சண்டை போட்டு கோபமடைந்து படகிலிருந்து நடுக்கடலில் குதித்துவிட்டாராம்.
இதனால் அங்கிருந்த அனைவரும் பதற்றமடைந்த நிலையில், அங்கே இருந்தவர்களின் உதவியின் மூலம் கூல் சுரேஷை மீண்டும் படகிற்கு கொண்டு வந்ததாக தெரிகிறது.