திருடன் கிட்ட கத்துக்கணும்.. பிக் பாஸ் குறித்து கூல் சுரேஷ் பளீர்..!
Author: Vignesh21 December 2023, 3:45 pm
இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்கி உள்ளது.

இந்த சீசனில் தான் முதல்முறையாக பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என இரண்டு வீடுகள் இடம்பெற்றுள்ள நிலையில், இரண்டாவது வீடு சிறைச்சாலை போன்ற விதிகளுடன் இயங்க தொடங்கியுள்ளது.

இந்தநிலையில், தமிழ் சினிமாவில் வில்லன், காமெடி என்று சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து ஓரளவு பிரபலமாக இருந்தவர் கூல் சுரேஷ். நடிகர் சிம்புவின் நண்பராகவும், ரசிகராகவும் தன்னை காட்டிக் கொண்டார். வெந்து தணிந்தது காடு படத்தின் ப்ரோமோஷனுக்காக களம் இறங்கி வெந்து தணிந்தது காடு.. சிம்புக்கு வணக்கத்தை போடு என கூவு கூவுனு கூவி பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.

தற்போது பிக் பாஸ் 7ல் என்ட்ரி கொடுத்து கடந்த வாரம் எலிமினேட் ஆகி வீட்டை விட்டு வெளியேறிய கூல் சுரேஷ் தொலைக்காட்சியில் நடத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசியிருக்கிறார். அதில் பிக் பாஸ் வீட்டிற்குள் போக வேண்டும் என்றால், திருடனிடம் எப்படி அந்த வீட்டில் இருக்க வேண்டும். மாறி மாறி பேசுவது எப்படி என்று கற்றுக் கொள்ள வேண்டும். காவல்துறையிடம் சென்று திருடனை எப்படி கண்டுபிடிக்க வேண்டும் என்று கற்றுக் கொள்ள வேண்டும்.
விஷ்ணு, விஜய், தினேஷ், மணி போன்றவர்கள் உண்மையாக இருக்கிறார்கள். மீதி பேர் எல்லாம் பொய்யாக நடிக்கிறார்கள். கடினமான போட்டியாளர் அர்ஷனா, விஷ்ணு, தினேஷ், மணி, விசித்ரா போன்றவர்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும், பிக் பாஸ் வீட்டில் பொறுமையுடன் சகிப்புத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று தான் கற்றுக் கொண்டதாக கூல் சுரேஷ் வெளிப்படையாக பேசியுள்ளார்.