பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட கூல் சுரேஷ்.. பட ஆடியோ Launch-ல் பரபரப்பு.. கடுப்பான மன்சூர் அலிகான்..!
Author: Vignesh20 September 2023, 10:30 am
தமிழ் சினிமாவின் பிரபல வில்லன் நடிகரான மன்சூர் அலிகான் 90ஸ் காலகட்டத்தில் வெளியான பெரும்பாலான படங்களில் ஹீரோவை மிரட்டி எடுத்தவர். இவர் வில்லனாகவும், குணசித்திர நடிகராவும் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்து பெரிதும் புகழ் பெற்றார். குறிப்பாக கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் இவரது வில்லத்தனமான நடிப்பு தமிழ் சினிமாவையே மிரள வைத்தது.
இதனிடையே அரசியல் பக்கம் தலைகாட்டினார். அவ்வப்போது சர்ச்சையாக எதையேனும் பேசி வம்பில் சிக்குவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார். இதனிடையே அவ்வப்போது கிடைக்கும் படவாய்ப்புகள் தொடர்ந்து நடித்து வருகிறார். அந்தவகையில் தற்ப்போது விஜய்யின் லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரமொன்றில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில், அவர் ஹீரோவாக நடித்துள்ள சரக்கு படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தை ஜெயக்குமார் ஜே என்பவர் இயக்கியுள்ளார். மேலும், ஹீரோயினாக வலினா ஃபிரண்ஸ் நடிக்க, சிறப்பு தோற்றத்தில் அரசியல்வாதி நாஞ்சில் சம்பத் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படமானது ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே திருப்பி போடும் வகையில் இருக்கும் என நேர்காணல் ஒன்றில் மன்சூர் அலிகான் தெரிவித்து இருந்தார்.
தற்போது, இதற்கான இசை வெளியீட்டு விழாவில், சர்ச்சையாக பேசி வாங்கி கட்டிக் கொள்ளும் கூல் சுரேஷ் இருந்தார். எப்போதும் போலவே ஒரு சர்ச்சையான சம்பவத்தை சரக்கு இசை வெளியீட்டு விழாவில் செய்துள்ளார். அதாவது அவரைப் பேச தொகுப்பாளரை அழைத்தார். அப்போது, கழுத்தில் மாலை அணிந்து கொண்டு கையில் ஒரு மாலையுடன் வந்த அவர், சற்றும் எதிர்பாராத விதமாக தொகுப்பாளினிக்கு மாலை அணிவித்து அதிர்ச்சி ஏற்படுத்தினார்.
இதனை கண்டு தொகுப்பாளினி கடும் கோபம் அடைந்தார். எல்லோருக்கும் மாலை போட்டிங்க… ஆனா, நம்மை வித்தியாசமான வார்த்தைகளை கூறி வரவேற்க்கும் இவருக்கு மாலை போட்டோமா? என அவர் காரணம் கூறினாலும், இந்த சம்பவம் பத்திரிகையாளர் மத்தியில் கடும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
உடனடியாக மன்சூர் அலிகான் நன்றி தெரிவிக்க வந்தபோது, அவரிடம் ஒரு பெண் தொகுப்பாளினியிடம் கூல் சுரேஷ் இப்படி நடந்து கொள்ளலாமா? என கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்த மன்சூர் அலிகான் கூல் சுரேஷ் அப்படி நடந்தது தவறுதான். அவருடைய செயலை கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். அவருக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என கூறி கூல் சுரேசையும் மன்னிப்பு கேட்க சொன்னார்.
ஆனால், அவரோ வித்யாசமான விளக்கம் ஒன்றே கொடுத்தார். இந்த நிகழ்ச்சிக்கு வந்ததிலிருந்து நானும் அந்த பெண்ணும் பேசிக் கொண்டிருந்தோம் எனக் கூற அந்த தொகுப்பாளினி நான் உங்களிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என பதில் கொடுத்தார். தொடர்ந்து தான் தெரியாமல் அப்படி செய்து விட்டதாகவும், மன்னிச்சுக்கோ தங்கச்சி எனச் சொல்லியும் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தார். ஆனால், கூல் சுரேஷின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
c0*ol ssஸ் video எங்க சேனலில் பதிவேற்ற கூடாது என்று முடிவில் இருக்கிறோம். அதனை கடைபிடித்தும் வருகிறோம்..
— Shruti TV (@shrutitv) September 19, 2023
இன்று நடந்து கொண்டது அநாரிகத்தின் உச்சம்.. அதனை மட்டும் மக்கள் பார்வைக்கு..
video : https://t.co/yp5KAmL0j5 pic.twitter.com/YPjueAYBhN