அண்ணாமலையை தொடர்ந்து கூல் சுரேஷ் சாட்டையடி… வைரலாகும் வீடியோ..!

Author: Selvan
27 December 2024, 6:55 pm

அண்ணாமலை vs கூல் சுரேஷ்

இன்று காலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவரது வீட்டின் முன்பு சட்டை போடாமல் பல முறை சாட்டையை வைத்து தன்னைத்தானே அடித்தார்.

Annamalai BJP Leader Whip Protest

முன்னதாக நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் மாணவி ஒருவருக்கு அந்த பகுதியில் பிரியாணி கடை நடத்தி வரும் நபர் ஒருவர்,பாலியல் வன்கொடுமை செய்த செயலுக்கு,மாணவி அளித்துள்ள புகார் விவரம் வெளியே கசிந்துள்ளதால்,அதனை கண்டித்து அண்ணாமலை சாட்டையடி போராட்டடத்தை இன்று நடத்தினார்.

இதையும் படியுங்க: சொன்னதைச் செய்த அண்ணாமலை.. 6 முறை சாட்டையால் தன்னைத்தானே அடித்து போராட்டம்!

இதனை பார்த்த பல அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் அண்ணாமலையை கிண்டலடித்து கேலி செய்து வருகின்றனர்.இந்த நிலையில் தற்போது சிம்புவின் தீவிர ரசிகரான கூல் சுரேஷ் நடு ரோட்டில் சட்டை இல்லாமல்,தன் மேல் சாட்டையை வைத்து அடித்துள்ளார்.

அப்போது அவர் நந்த பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் இன்று வெளியான திரு.மாணிக்கம் திரைப்படத்தை விளம்பரப்படுத்தி,இந்த செயலை செய்துள்ளார்.இந்த விடீயோவை பார்த்த ரசிகர்கள் எல்லோரும் அண்ணன் சூனா பானா போல ஆக முடியுமா என கிண்டல் அடித்து வருகின்றனர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!