ரஜினியின் ‘கூலி’ திரைப்படத்தில் இன்னொரு மாஸ் நடிகர்.. போஸ்டருடன் படக்குழு அறிவிப்பு!

Author:
29 August 2024, 7:05 pm

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்கிற திரைப்படத்தில் நடித்த வருகிறார். இந்த திரைப்படம் ரஜினிகாந்தின் 171 வது திரைப்படமாக உருவாகி வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர் இப்படத்தின் டைட்டில் மற்றும் டீசரை படக்குழு அறிவித்திருந்தது.

இந்த டீசர் வீடியோவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுத்து படத்தின் மீதான எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்தது. இப்படத்தில் ரஜினிகாந்த் கேங்ஸ்டர் வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியது. தங்க கடத்தல் சம்பவத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.

இப்படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இந்த நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால். இப்படத்தில் பிரபல தெலுங்கு நட்சத்திர நடிகர் நாகார்ஜுனா “சைமன்” என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரது கதாபாத்திர போஸ்டரை பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

முன்னதாக இந்த படத்தில் மலையாளத்தில் சமீபத்தில் வெளிவந்து மெகா ஹிட்டான மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் குட்டன் என்ற கேரக்டரில் நடித்த நடிகர் சவ்பின் ஷாகிர் “தயாள்” என்ற கேரக்டரில் நடிக்க உள்ளதாக போஸ்டருடன் படக்குழு இணையத்தில் அறிவித்தது குறிப்பிடதக்கது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ