சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் பணிபுரிய வேண்டும் என்ற ஆசை ரொம்ப நாளாக இருந்து வந்தது.
அதனால் கூலி திரைப்படத்தில் ரஜினி நடித்து வந்தார்.கூலி திரைப்படம் தான் ரஜினிற்கு கடைசி படம் என பேசப்பட்டு வந்த நிலையில் அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.கூலிக்கு பிறகும் நடிப்பதாக சொன்னார்.
கூலி படத்தின் சூட்டிங் பரபரப்பாக நடந்து கொண்டிருந்த சூழ்நிலையில் தான் திடீரென ரஜினிகாந்திற்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார்.
அதன் பிறகு ஒரு மைனர் ஆப்ரேஷன் அவருக்கு நடந்தது.இதனால் படப்பிடிப்பிற்கு நீண்ட நாட்களாக வரவில்லை.இந்த சூழ்நிலையில் படப்பிடிப்பை நிறுத்த முடியாது என்பதால் ரஜினி அல்லாத காட்சிகளை லோகேஷ் எடுத்து வருகிறார்.
சில சண்டை காட்சிகளில் ரஜினி இல்லாமல் சூட் பண்ணி வருகிறார். ரஜினி உடல் நிலை சரியான பிறகு ரஜினியை வைத்து மீதி எடுத்து அதை சிஜி மூலம் இணைப்பதற்கான வேலைகளை பார்க்கலாம் என லோகேஷ் முடிவெடுத்திருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
இதையும் படியுங்க: இதுதான் காதலா… இல்லை இதான் காதல் .. மனம் திறந்த நயன்தாரா!
இதன் மூலம் கூலி படப்பிடிப்பில் நிறைய பட்டி டிங்கரிங் வேலைகளை லோகேஷ் கனகராஜ் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
0
0