‘கூலி’ படத்தில் இருந்து வெளியேறிய ரஜினி..வைரலாகும் வீடியோ.!

Author: Selvan
18 March 2025, 1:55 pm

கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

ரஜினிகாந்த் நடிப்பில்,லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘கூலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

இதையும் படியுங்க: படம் எடுக்க கேமரா மட்டும் போதுமா..யாரை தாக்கினார் ஞானவேல் ராஜா.!

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கியது.அதனைத்தொடர்ந்து படக்குழுவினர் படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர்களின் கதாபாத்திரங்களை வெளிப்படுத்தினர்.

இதில்,சௌபின் சாஹிர் தயாள் என்ற கதாபாத்திரத்தில்,நாகர்ஜுனா சைமன் என்ற கதாபாத்திரத்தில்,உபேந்திரா கலீஷா என்ற கதாபாத்திரத்தில்,சத்யராஜ் ராஜசேகர் என்ற கதாபாத்திரத்தில், ஸ்ருதிஹாசன் பிரீத்தி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.மேலும்,நடிகை பூஜா ஹெக்டே ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது,படக்குழுவினர் வெளியிட்ட மேக்கிங் வீடியோவில் “It’s a super wrap” என்று குறிப்பிடப்பட்டு ஷூட்டிங் வெற்றிகரமாக முடிவடைந்து விட்டதாக கூறியுள்ளது.. இதனால்,ரசிகர்களிடம் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும் படத்தின் ட்ரைலர்,பாடல்கள்,மற்றும் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…