ரஜினிக்கு மகளாகும் ஸ்ருதிஹாசன்…? “கூலி” படத்திற்கு கூடும் எதிர்பார்ப்பு!

Author:
30 August 2024, 7:31 pm

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்கிற திரைப்படத்தில் நடித்த வருகிறார். இந்த திரைப்படம் ரஜினிகாந்தின் 171 வது திரைப்படமாக உருவாகி வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர் இப்படத்தின் டைட்டில் மற்றும் டீசரை படக்குழு அறிவித்திருந்தது.

இந்த டீசர் வீடியோவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுத்து படத்தின் மீதான எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்தது. இப்படத்தில் ரஜினிகாந்த் கேங்ஸ்டர் வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியது. தங்க கடத்தல் சம்பவத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.

இப்படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இந்த நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால். முன்னதாக இப்படத்தில் பிரபல தெலுங்கு நட்சத்திர நடிகர் நாகார்ஜுனா “சைமன்” என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் அவரது கதாபாத்திர போஸ்டரை பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

அடுத்ததாக மலையாளத்தில் சமீபத்தில் வெளிவந்து மெகா ஹிட்டான மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் குட்டன் என்ற கேரக்டரில் நடித்த நடிகர் சவ்பின் ஷாகிர் “தயாள்” என்ற கேரக்டரில் நடிக்க உள்ளதாக போஸ்டருடன் படக்குழு அறிவித்தது. இந்நிலையில் தற்ப்போது இப்படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் “ப்ரீத்தி” என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அவரின் கேரக்டரை பட குழு போஸ்டருடன் அறிவித்துள்ளது. அதில் நடிகை ஸ்ருதிஹாசன் மண்வெட்டியுடன். கண்ணில் ஒரு விதமான பயத்துடன் இருக்கிறார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாக ஸ்ருதிஹாசன் இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் மகளாக நடித்திருப்பார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

  • singampuli shared the experience on mayandi kudumbathar movie நான் நடிக்கவே மாட்டேன்னு சொன்னேன், ஆனா அவர்தான் என்னைய?- ஓபனாக போட்டுடைத்த சிங்கம்புலி…
  • Close menu