நான் எப்போதும் சந்திக்க விரும்பிய ஒரு ஹீரோ; சந்தித்தது மகிழ்ச்சி; கிரிக்கெட் வீரரின் நெகிழ்ச்சி பதிவு
Author: Sudha20 July 2024, 4:56 pm
ஜஸ்பிரித் உம்ரா இந்திய கிரிக்கெட் அணியின் விரைவுப் பந்துவீச்சாளர். t20 கிரிக்கெட் போட்டிகளில் ஒரே ஆண்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.28 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த சாதனையைப் படைத்தார்.
சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்சன்ட் திருமணத்தில் தன் மனைவியுடன் கலந்து கொண்ட கிரிக்கெட் வீரர் பும்ரா ரஜினிகாந்துடன் அவரும் குடும்பத்துடன் சேர்ந்து எடுத்த கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
அதில் கேப்ஷனாக நான் எப்போதும் சந்திக்க விரும்பிய மனிதர் சந்திக்க எனக்கு கிடைத்த வாய்ப்புக்காக மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.இந்த பதிவு இப்போது ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.பும்ரா கூட ரஜினி ரசிகரா என்று சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் இந்த பதிவை ஷேர் செய்து வருகின்றனர்.
https://www.instagram.com/p/C9omrU6Sl6Y/?utm_source=ig_web_copy_link