சர்வதேச போட்டிகளில் சிவகார்த்திகேயன்; எப்போது களமிறங்க போகிறார்?

Author: Sudha
1 July 2024, 1:55 pm

சேலம் மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து சர்வதேச போட்டிகளில் விளையாடும் அளவுக்கு உயர்ந்தவர் கிரிக்கெட் வீரர் நடராஜன்.

இவருடைய வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ஒரு திரைப்படம் வெளிவர போவதாகவும் அதில் சிவ கார்த்திகேயன் நடராஜன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் ஆரம்பத்தில் சொல்லப்பட்டது. இடையில் இது பற்றி எந்த தகவலும் இல்லை

இப்போது சமீபத்துல அளித்த ஒரு பேட்டி ஒன்றில் இத்தகவலை உறுதி செய்துள்ளார் நடராஜன். தன்னுடைய சீசன் அனைத்தும் முடிந்த பிறகு சிவகார்த்திகேயன் அவர்களை சந்திக்க போவதாகவும் சிவகார்த்திகேயனும் எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம் என்று கூறி இருப்பதாகவும் தன் வாழ்க்கை வரலாற்றை எடுத்து அதில் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் நடிக்க அவர் தயாராக இருப்பதாக சொன்னதாகவும் அது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது எனவும் தெரிவித்தார்.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!