ராஜராஜ சோழன் சர்ச்சை: “இந்து என்ற மதம், இந்து என்ற பிரச்சனையாக மதம்மாறி விட்டது”- பழுவேட்டரையர் ட்விட்..!
Author: Vignesh13 October 2022, 5:45 pm
வெற்றி படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்த பிரபல இயக்குநர் வெற்றிமாறன், வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது, இப்படி தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. இது சினிமாவிலும் நடக்கும். சினிமாவிலும் நிறைய அடையாளங்களை காட்டுகிறார்கள். இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். நம்முடைய விடுதலைக்காக நாம் போராட வேண்டும் என்றால் நாம் அரசியல் தெளிவுடன் இருக்க வேண்டும்,” எனப் பேசியிருந்தார்.
வெற்றிமாறனின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். தஞ்சை பெரிய கோயில் உட்பட ஏராளமான சிவன் கோயில்களை கட்டிய ராஜராஜ சோழன் இந்து இல்லையா? என்று கேள்வி எழுப்பினார். அதேவேளையில், ராஜராஜ சோழன் இந்து கிடையாது என்று கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்களும், திமுக உள்ளிட்ட கட்சியினரும், வெற்றிமாறனுக்கு ஆதரவாக கருத்துக்களை கூறி வருகின்றனர். சமூக வலைதளங்கள் முழுவதும் ராஜராஜ சோழன் குறித்த விவாதமே ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்த சரத்குமார் ராஜராஜ சோழன் சர்ச்சை குறித்து கோழி வந்ததா? முட்டை வந்ததா? என்பது போல ஆராய்ச்சி செய்து என்ன சாதிக்க போகிறோம்? என தனது அறிக்கையில் இந்த விவகாரம் தொடர்பாக சாடியிருந்தார்.
இதனைதொடர்ந்து, சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்த பார்த்திபன் தன் சமூக வலைதளத்தில், பகிர்ந்துள்ள பதிவு வைரலாகி வருகிறது.
அதில், “Crosses-400 Crores!!!! இந்து என்ற மதம் இன்று இந்து என்ற பிரச்சனையாக மதம்மாறி விட்டது! இந்த எழுத்தும் ஏதோ ஒரு பிரச்சனையை எழு (இ)ப்ப லாம்! எழு ப்பினால் … இன்னும் ஒரு 100!” என்று பார்த்திபன் பகிர்ந்துள்ளார்.
Crosses-400
— Radhakrishnan Parthiban (@rparthiepan) October 13, 2022
Crores!!!!
இந்து என்ற மதம்
இன்று
இந்து என்ற பிரச்சனையாக
மதம்மாறி விட்டது!
இந்த எழுத்தும் ஏதோ ஒரு
பிரச்சனையை எழு (இ)ப்ப லாம்!
எழு ப்பினால் …
இன்னும் ஒரு 100!