இளையராஜாவுக்கு காசுதான் முக்கியமா? இப்படிப்பட்ட ஒரு மனுஷன்… பிரபல இயக்குனர் காட்டம்…

Author: Prasad
16 April 2025, 12:38 pm

5 கோடி இழப்பீடு

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில் இத்திரைப்படம் இந்நாள் வரை ரூ.100 கோடிக்கும் மேலாக வசூல் செய்துள்ளது. வெகுஜன ரசிகர்களின் மத்தியில் இத்திரைப்படத்தின் மீது சில விமர்சனங்கள் இருந்தாலும் “இது அஜித் ரசிகர்களுக்காகவே எடுக்கப்பட்ட திரைப்படம்” என்று அஜித் ரசிகர்கள் பலர் கூறி வருகின்றனர். 

இத்திரைப்படத்தில் பல பழைய பாடல்கள் பின்னணியில் ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டிருந்தது. அதில் இளையராஜா இசையமைத்த “ஒத்த ரூபா தாரேன்”, “என் ஜோடி மஞ்சக்குருவி”, “இளமை இதோ இதோ” போன்ற பாடல்களும் இடம்பெற்றிருந்தன. 

cs-amudhan-shared-that-does-ilaiyaraaja-want-money-in-this-issue

இந்த நிலையில் தன்னுடைய அனுமதி இன்றி இப்பாடல்களை பயன்படுத்தியதாக இளையராஜா தரப்பில் இருந்து ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இச்செய்தி அஜித் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதுமட்டுமல்லாது இவ்விவகாரத்தில் இளையராஜாவை பலரும் விமர்சித்து வருகின்றனர். எனினும் இளையராஜா தனது உரிமையையே கேட்கிறார் என அவருக்கு பலரும் ஆதரவு தெரிவித்தும் வருகின்றனர்.

அவர் கேட்பதெல்லாம் இதுதான்?

“தமிழ் படம்”, “இரத்தம்” ஆகிய திரைப்படங்களை இயக்கிய சி.எஸ்.அமுதன் இளையராஜாவை குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு கருத்து தெரிவித்துள்ளார். அதாவது “இரத்தம்” திரைப்படத்தின் டீசருக்கான புரொமோ வீடியோ ஒன்று 2022 ஆம் ஆண்டு வெளியானது. அந்த வீடியோவில் “ஒரு கூட்டுக்கிளியாக” என்ற இளையராஜாவின் பாடல் பின்னணியில் இடம்பெற்றிருந்தது. 

இந்த வீடியோவை நேற்று மீண்டும் பகிர்ந்த சி.எஸ்.அமுதன், “இந்த பாடலை இந்த டீசருக்கு பயன்படுத்த அனுமதி கேட்பதற்கு இளையராஜாவின் குழுவை நாங்கள் தொடர்புகொண்டோம். இரத்தம் படத்தின் தயாரிப்பாளர்கள் இந்த பாடலை பயன்படுத்துவதற்காக இளையராஜாவுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுக்க தயாராக இருந்தனர். 

cs-amudhan-shared-that-does-ilaiyaraaja-want-money-in-this-issue

ஆனால் இளையராஜாவின் குழுவினர் பணம் எதுவும் வேண்டாம், பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று அனுமதி வழங்கிவிட்டார்கள். தனது ஒப்புதல் மட்டும் பெற்றால் போதும் என்றுதான் இளையராஜா நினைக்கிறார். நம்மால் செய்யக்கூடிய குறைந்தபட்ச ஒன்று. இந்த விஷயத்தில் சினிமாத்துறையைச் சேர்ந்தவர்களாகிய நாம் அவருக்கு துணையாக நிற்கவில்லை என்றால் வேறு யார் இதற்கு தகுதியானவர்கள்?” என்று இளையராஜாவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். சி.எஸ்.அமுதனின் இந்த பதிவை பலரும் ஆமோதித்து வருகின்றனர். 

  • Vijay TV VJ Priyanka's 2nd marriage... Viral video!விஜய் டிவி VJ பிரியங்காவுக்கு சைலண்டாக நடந்த 2வது திருமணம்? வெளியான புகைப்படம்!
  • Leave a Reply