சொம்புகள் கூடாரம்…. மணிமேகலை மீது இவ்வளவு வன்மமா? CWC -5 லேட்டஸ்ட் Promo!

Author:
26 September 2024, 3:02 pm

குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி ஆங்கர் ஆக பணியை செய்து வந்த VJ மணிமேகலைக்கும் அந்த நிகழ்ச்சியின் கோமாளியாக இருந்து வந்த பிரியங்காவுக்கும் இடையே கடுமையான சண்டை மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டு பிரியங்கா மணிமேகலையின் வேலையில் குறுக்கிட்டு அவரை தொகுப்பாளினி பணியை செய்ய விடாமல் தடுத்து வந்ததாக கூறி மணிமேகலை அந்த நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக வெளியேறினார்.

vj manimegalai

இந்த விஷயம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டதை அடுத்து ஆரம்பத்தில் மணிமேகலைக்கு சப்போர்ட் செய்த பலரும் பின்னர் பிரியங்கா பக்கம் சாய்ந்து அவருக்கு சப்போர்ட் செய்ய ஆரம்பித்தனர். மணிமேகலை அதையும் எதிர்த்து வீடியோக்கள் வெளியிட்டிருந்தார்.

மேலும் படிக்க: குக் வித் கோமாளிக்கு வரும் பிரபல நடிகை.. வெளிவந்த Promo குஷியில் ரசிகர்கள்..!

அந்த வகையில் மணிமேகலைக்கு ஆரம்பத்தில் ஆதரவாக பேசும் வகையில் கமெண்ட் செய்திருந்த பலபேர் திடீரென பிரியங்காவுக்கு சப்போர்ட் செய்யும் விதமாக இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி போட்டு திடீரென கட்சி மாறிவிட்டார். இப்படி தனக்கு சப்போர்ட் செய்தவர்கள் திடீரென பிரியங்காவுக்கு சப்போர்ட் செய்ததை பார்த்து கடும் கோபத்திற்கு உள்ளான மணிமேகலை தனது கணவருடன் சேர்ந்து சொம்புக்கெல்லாம் என்னடா மரியாதை? திட்டியிருந்தார்.

manimegalai-vj-1

இந்நிலையில் தற்ப்போது குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் மணிமேகலை போல புகழ் மற்றும் பிரியங்கா போல ராமர் ஆகியோர் பேசி, அந்த சண்டை சம்பவத்தை கலாய்ப்பது போல பேசி காட்டி இருக்கின்றனர். இதனை பலரும் விமர்சித்து திட்டி தீர்த்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ:

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!