கழுத்தை பிடிச்சு நெறிக்கிறாங்க.. கொலை பண்ண பார்க்குறாரு.. கதறிய குக் வித் கோமாளி தீபா..!

Author: Vignesh
19 August 2023, 12:40 pm

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி அதிக அளவில் பிரபலமானது. இந்த நிகழ்ச்சியின் மூலம் பலர் பிரபலமானார்கள் என்று சொல்லலாம். அந்த வகையில், அதில் தீபாவும் ஒருவர்.

பார்க்க உடல் பருமனாக காணப்படும் இவர், குணத்தில் ஒரு குழந்தையாகவே இருப்பார் என்று சொல்லலாம். அந்த நிகழ்ச்சி தாண்டி சீரியல்களிலும், படங்களிலும் தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார்.

deepa-updatenews360

அண்மையில், இவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அங்கு நடந்த சம்பவம் தற்போது, இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சி போல ஜீ தமிழில் தமிழா தமிழா என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

இதில், புதிய தொகுப்பாளராக பத்திரிகையாளர் ஆவுடையப்பன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தீபாவை பாலியில் பூனையின் புளுக்கையில் இருந்து செய்யப்பட்ட காபியை தொகுப்பாளர் குடிக்க கொடுத்தார். அவர் அதை மறுத்து விடுகிறார்.

deepa-updatenews360

ஆனால், அங்கு இருக்கும் பெசன்ட் ரவி அந்த காபியை குடிக்க வைத்தார். அப்போது அவர் ஐயோ என் கழுத்தைப் பிடித்து நெறிக்கிறாங்க என்ன கொலை பண்ண பார்க்கிறாங்க நான் ஜீ தமிழ் மேல போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திடுவேன் என்று தீபா கதறியுள்ளார்.

  • Squid Game 2 Today Release timing on Netflix இன்று வெளியாகும் SQUID GAME 2…. எத்தனை எபிசோடுகள் தெரியுமா?
  • Views: - 594

    0

    0