கண்காணாத இடத்துக்கு போறேன்.. -Emotional ஆன குக் வித் கோமாளி சக்தி..!
Author: Vignesh8 June 2023, 12:15 pm
குக் வித் கோமாளி 4வது சீசன் படு ஜோராக நடைப்பெற்று வருகிறது. புத்தம்புது போட்டியாளர்கள், கோமாளிகள் என தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக பல எபிசோடுகளை கடந்து முடித்துவிட்டது.
இதனிடையே, இந்த நிகழ்ச்சியின் மூலம் தங்களது திறமையை வெளிக்காட்டி உயர்ந்தவர்கள் பலர் உள்ளார்கள். ஆனால் சிலருக்கு கைகொடுக்காமலும் இருந்துள்ளது. இந்நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் நல்ல ரீச் கிடைத்து படங்கள் நடிக்கும் பிரபலங்கள் இருக்கின்றனர். ஒரே ஒரு உதாரணம் கூற வேண்டும் என்றால் புகழை கூறலாம்.
இவருக்கு கைகொடுத்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி சக்திக்கு கைகொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். சக்தி எப்போதும் இன்ஸ்டா பக்கத்தில் லைவ் வந்து பேசுவது வழக்கம், அந்தவகையில், அண்மையில் ஒரு வீடியோவில் கையில் அடிபட்டு கட்டுடன் பேசி உள்ளார். அதில், ஹாய் நான் ஒரு சின்ன பிரேக் எடுத்துக்கப் போறேன் என்றும், பிஸிகல் ஆகவும் சரி மென்டலாகவும் சரி, கொஞ்சம் மனதிற்கு ஒரு மாதிரியா இருக்கு என்று கூறியுள்ளார்.
மேலும், தான் இப்போ பழைய சக்தியா இல்லாத மாதிரியான feel இருக்கு என்றும், மீடியால நிறைய விஷயத்தை நான் புரிஞ்சிட்டேன் என்றும், ஆனா எல்லாத்தையும் நான் இப்ப சொல்ல முடியாது. கொஞ்ச நாளைக்கு கண்காணாத இடத்துக்கு போயிட்டு வரேன் என மிகவும் எமோஷ்னலாக பேசி இருக்கிறார். அதைக்கேட்ட ரசிகர்கள் திடீரென என்ன ஆனது, கஷ்டப்படாதீர்கள், எல்லாம் சரியாகிவிடும் என ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.