திருமண நாளில் Good News சொன்ன புகழ் – மளமளவென குவியும் வாழ்த்துக்கள்!

Author: Shree
1 September 2023, 12:42 pm

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்சியில் பங்கேற்று மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் புகழ். இவர் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது காமெடியால் அனைவரையும் சிரிக்க வைத்தார்.

குறிப்பாக குக் வித் கமலி நிகழ்ச்சியில் ஷிவாங்கி, ரம்யா பாண்டியன், மணிமேகலை, பவித்ரா உடன் செய்த அட்ராசிட்டிகள் ஏராளம். இவரது வெகுளித்தனமான நடவடிக்கைகள் மக்கள் எல்லோருக்கும் பிடித்துப்போக திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் தேடி வந்தது. ‘வலிமை’, ‘எதற்கும் துணிந்தவன்’ உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார்.

இதனிடையே தனது நீண்ட நீண்ட நாள் பென்ஸி திருமணம் செய்துக்கொண்டார். இந்நிலையில் இன்று திருமண நாளை கொண்டாடும் புகழ் குட் நியூஸ் கூறி எல்லோரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். ஆம், பென்சி தற்போது கர்ப்பமாக இருக்கிறாராம். கர்ப்பமாக இருக்கும் மனைவியுடன் எடுத்துக்கொண்ட போட்டோ ஒன்றை வெளியிட்டு,

என்னுடைய வளர்ச்சியில் வழித்துணையாய் வந்தவள், இப்போது என்னை என் வாழ்வின் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளாள். இத்தனை நாட்களில் எத்தனையோ பரிசுகளை எனக்கு அளித்தவள், ஆனால் இன்று அவள் அளித்த பரிசிற்கு ஈடு இணையே இல்லை. என் அனைத்து சுக துக்கங்களிலும் என்னுடன் இருந்தவள் நீ, இனி இன்னொரு உயிரும் நம்முடன் இருக்கப்போகிறது என்று நினைக்கும் போது, இதைவிட பெரிய மகிழ்ச்சி இந்த உலகத்தில் வேறெதுவும் இல்லை.என்னை தகப்பனாக்கிய என் தாயுமானவளுக்கு அன்பு முத்தங்கள்… இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார் . இதையடுத்து புகழுக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?
  • Close menu