இந்த பொண்ணு யாருன்னு தெரியுதா.. அட இவங்க சர்ச்சை நாயகனோட காதலியாச்சே..!

Author: Vignesh
23 July 2024, 6:34 pm

விஜய் டிவியின் மிகவும் பிரபலமான அனைவரையும் கவர்ந்த நிகழ்ச்சி என்று சொல்லும் அளவிற்கு பெயர் பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி, நான்கு சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. தற்போது, ஐந்தாம் சீசன் நடைபெற்று வருகிறது. அதில், தாமு மற்றும் நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோர் இருக்கிறார்கள். மேலும், புதிய கோமாளிகளும் களமிறக்கப்பட்டுள்ளார்கள்.

மேலும் படிக்க: ஹன்சிகாவுக்காக பல கோடி செலவு செய்த சிம்பு.. வெட்ட வெளிச்சமாக்கிய பிரபலம் ..!

இந்நிலையில், நிகழ்ச்சியில் எப்போதும் பெண் போட்டியாளர்களிடம் புகழ் வழிந்து பேசுவது வழக்கம். அந்த வகையில், ஷாலின் சோயாவுடன் தொட்டு பேசி அவருக்கு ருட்டு விட்டு வருகிறார் புகழ். இதனை பார்த்த ஷாலின் சோயாவின் காதலர் டிடிஎஃப் வாசன் கடுமையாக புகழை விமர்சித்தும், மேலும் என் லவ்வர் மேல கைய வைக்க நீங்க யாரு ? லவ் பண்ற பசங்களுக்கு தான் அந்த வழி புரியும் என்றும் கூறி இருந்தார்.

தற்போது, டிடிஎஸ் வாசனின் காதலி என்று அழைக்கப்படும் ஷாலின் சோயா சிறுவயதிலிருந்தே நடித்து வருகிறாராம். அவர் ஒரு சீரியலில் தான் முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். அதுதான் தனது கேரியரில் பெரிய ஒன்று என ஷாலின் சோயா தற்போது கூறியிருக்கிறார். அவர் இளம் வயதில் நடித்த அந்த சீரியலில் இருந்து சில வீடியோக்களை அவர் வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோ தான் தற்போது, சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • Actor Vinayakan controversy போதையில் செய்த அடாவடி…என்னால சமாளிக்க முடியல…மன்னிப்பு கேட்ட விநாயகன்…!