நான் சொன்ன நீங்க விஷம் குடிச்சுருவீங்களா?.. சுய புத்தி இல்லையா?.. சரமாரியாக பேசிய வெங்கடேஷ் பத்..!
Author: Vignesh25 March 2023, 11:27 am
விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகாரமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. முதல் இரண்டு சீசன்களில் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது சீசனும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Cook With Comali நிகழ்ச்சியின் புரொமோவுக்கு எப்போதும் வரவேற்பு அதிகம், இதில் கோமாளிகளாக சிலர் நாம் ஏற்கெனவே பார்த்தவர்கள் உள்ளனர், இதில் புதிய கோமாளிகளும் உள்ளார்கள்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வருகிற ஜனவரி 28-ந் தேதி முதல் ஒளிபரப்பானது. கடந்த சீசன்களில் கோமாளியாக வந்து கலக்கிய புகழ், குரேசி ஆகியோர் இந்த சீசனில் கலந்துகொண்டனர். புதிய கோமாளிகளாக ஜி.பி.முத்து, ஓட்டேரி சிவா, சிங்கப்பூர் தீபன், ரவீனா தாகா ஆகியோரை கோமாளிகளாக களமிறக்கி உள்ளனர்.

குக் வித் கோமாளி சீசன் 4 சமீபத்தில் துவங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே, கோமாளிகளாக இருப்பவர்களை நடுவர் வெங்கடேஷ் சரமாரியாக பேசுவதும், பொருட்களை தூக்கி எறிவதுமாக இருந்து வருவதை பார்த்து மலேசியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.
அதில், நான் மலேசியாவில் இருந்து குக்கு வித் கோமாளி ரசிகை என்றும், நீங்கள் கோமாளியை நடத்தும் விதம் மிகவும் எரிச்சலாக இருக்கிறது என பதிவிட்டுள்ளார்.
இதற்கு வெங்கடேஷ் அளித்துள்ள பதில் பலரிடையே, அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நிகழ்ச்சியினை பார்க்காதீர்கள் என்றும், சார்லி சாப்ளின் அடிவாங்கவில்லையா? செந்தில் கவுண்டமணியிடம் அடி வாங்கவில்லையா என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், கொஞ்சமாவது வளருங்கள், இது வெறும் ஒரு நிகழ்ச்சி தான் என்றும், தான் சொன்னேன் என்பதற்காக விஷயத்தை எடுத்து குடித்து விடுவீர்களா உங்களுக்கு என்று சுய புத்தி கிடையாதா’ என்று வெங்கடேஷ் பத் பதிலடி கொடுத்துள்ளார்.