அவங்கள காதலிக்கிறேன்.. – உருக்கமாக ஸ்ருஷ்டி டாங்கே வெளியிட்ட பதிவு..!

Author: Vignesh
10 July 2023, 4:32 pm

எல்லா நடிகைகளையும் போலவே, நடிகை ஸ்ருஷ்டி டாங்கேயும், பட வாய்ப்புக்காக தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி, அதன் மூலம் கொஞ்சம் கவர்ச்சியாக படம் எடுத்து, தொடர்ந்து, சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு, பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.

மேகா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகம் ஆனவர் சிருஷ்டி டாங்கே. இவர் இந்தப் படத்தைத் தொடர்ந்து, டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார்.

srushti dange - updatenews360

அதன்பின், அவருக்கு சரி வர படங்கள் எதுவும் அமையவில்லை. இதனால் அவ்வப்போது சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், முதல் ஃபைனலிஸ்ட்டாக நடிகை விசித்திரா, இரண்டாம் இறுதி போட்டியாளராக மைம் கோபியும், 3வது போட்டியாளராக சிவாங்கியும் தேர்வானார்கள். நான்காவது போட்டியாளராக ஸ்ருஷ்டி டாங்கே தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் கிரண் வெளியேறுவார் என்று பார்த்தால் அவரை 5வது போட்டியாளராக அறிவித்து நடுவர்கள் ஷாக் கொடுத்தனர்.

srushti dange - updatenews360

தற்போது இதனால் சந்தோஷத்தில் இருந்த ஸ்ருஷ்டி டாங்கே, அவரது சமுகவலைத்தள பக்கத்தில் எமோஷ்னலான ஒரு பதிவினை பகிர்ந்து உள்ளார். அதில் தேங்க்யூ மோனி மற்றும் தங்கத்துரை, இரண்டு பேரையு நான் ரொம்ப காதலிக்கிறேன் என்றும் நான் வென்ற போது மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவராக உணர்ந்ததாகவும் ஐ லவ் யூ என்று நடிகை ஸ்ருஷ்டி டாங்கே உருக்கமாக பதிவிட்டிருந்தார்.

srushti dange - updatenews360
  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி