டி இமான் என்னை ஏமாத்திட்டாரு… வைக்கம் விஜயலட்சுமி வைத்த பகீர் குற்றச்சாட்டு!

Author: Udayachandran RadhaKrishnan
19 February 2025, 5:47 pm

தன்னுடைய குரலால் மெய்மறக்க வைத்தவர் பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி. கேரளாவை பூர்விகமாக கொண்ட விஜயலட்சுமி, பார்வை மாற்றுத்திறனாளி.

தனது அபூர்வ குரலால் இசை விரும்பிகளை மயக்கி வரும் வைக்கம் விஜயலட்சுமி குக்கூ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து காக்கா முட்டை, இதற்கு தானே, சொப்பன சுந்தரி, மண்ணிலே ஈரமுண்டு போன்ற பல பாடல்களை பாடி தமிழக மக்களை தன் குரலால் ஈர்த்தார்.

இதையும் படியுங்க : மும்பை போனதுக்கு இத்தனை கதையா? குழப்பத்தில் சூர்யா ரசிகர்கள்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

சினிமாவில் கோலோச்சிய வைக்கம் விஜயலட்சுமிக்கு திருமண வாழ்க்கை செட் ஆகவில்லை. 2016ஆம் ஆண்டு திருமணம் செய்ய பெற்றோர்கள் முடிவெடுத்த நிலையில், மாப்பிள்ளை வீட்டார் போட்ட கண்டிஷனால் திருமணம் நின்றது.

பின்னர் 2018ஆம் ஆண்டு மிமிக்ரி ஆர்டிஸ்ட் உடன் திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்றது. பல பிரபலங்களும் நேரில் வந்து வாழ்த்தினர். ஆனால் கருத்து வேறுபாடு மற்றும் கணவர் கொடுத்த டார்ச்சரால் விஜயலட்சுமி பிரிந்து வந்துவிட்டார்.

இந்த நிலையில் தொடர்ந்து தனது கேரியரில் கவனம் செலுத்தி வரும் வைக்கம் விஜயலட்சுமி, பேட்டி ஒன்றில், என் வாழ்க்கையில் நிறைவேறாத ஆசை இதுதான் என கூறியுள்ளளார்.

Vaikom Vijayalakshmi Talked About D Imman

அதாவது, இளையராஜா, வித்யாசாகர், ஏஆர் ரகுமான் இசையமைப்பில் ஒரு பாடலாவது பாட வேண்டும் என்று ஆசை உள்ளதாகவும் வாய்ப்புக்காக காத்திருப்பதாகவும் கூறினார்.

D Imman and Vaikom Vijayalakshmi

மேலும் தன்னை பார்க்க பாடகர் ஜெயச்சந்திரன் வந்ததாகவும், மலையாள இயக்குநர் கமல் வந்ததாகவும், பார்க்க வருகிறேன் என கூறிய டி.இமான் சார் இன்னும் வரவில்லை என ஏக்கமாக பேசினார்.

  • Bharathiraja son Manoj death இறந்த பின்பும் இப்படியா..மனோஜ் சவப்பெட்டி மீது நடந்த மோசமான செயல்..பிரபலம் காட்டம்.!
  • Close menu