நீ இருந்தால் இந்த துரோகம் நடந்திருக்குமா?.. புலம்பித் தவிக்கும் இசையமைப்பாளர் இமான்..!

Author: Vignesh
22 July 2024, 2:51 pm

டி. இமான் சிவகார்த்திகேயன் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார். அவரை நான் மன்னிக்கவே மாட்டேன். மேலும், இந்த ஜென்மத்தில் அவருடன் சேர்ந்து பணியாற்ற மாட்டேன் என்று பேட்டி ஒன்றில் கூறியது சினிமா வட்டாரத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனை இமான் மனைவியுடன் சிவகார்த்திகேயன் தகாத உறவு வைத்திருந்திருக்கிறார். அதைத்தான் இமான் துரோகம் என சொல்கிறார் என்றெல்லாம் கண்ணு, காது, மூக்கு வைத்து இஷ்டத்துக்கும் வதந்திகள் எழுதி வெளியிட்டிருந்தது பரபரப்பான செய்தியாக பேசப்பட்டு வந்தது.

இதுவரை சிவகார்த்திகேயன் இதற்கு எந்த ஒரு பதிலோ, மறுப்போ தெரிவிக்கவே இல்லை. இந்நிலையில் சிவகார்த்திகேயன் குறித்து எந்த செய்தி வெளியானாலும் அது சர்ச்சையாக தான் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. தொடர்ந்து அவ்வப்போது அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அதைப்பற்றி ஏதேனும் ஒரு தகவல் தொடர்ந்து வெளியாகிக்கொண்டு தான் இருக்கிறது.

இந்நிலையில், இரண்டாம் கல்யாணம் குறித்து பேசியுள்ள இசையமைப்பாளர் இமான், முதல் திருமணம் விவாகரத்து ஆனதில் நான் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி சுமார் 2 ஆண்டுகள் படவாய்ப்புகளே இல்லாமல் இருந்தேன். வாழ்க்கையில் சில முடிவுகள் எடுக்கும்போது என் அப்பா ரொம்பவே வருத்தப்பட்டார். 3 வருஷமாக என் மகள்கள் என் மீது பாசமே இல்லாமல் வெறுப்பாக இருந்தார்கள். அதற்கான காரணத்தை அவர்கள் பெரியவளானதும் சொல்லுவேன். நான் கள்ள உறவில் திருமணம் செய்யவில்லை.

மேலும், தனது தாய் குறித்து பேசுகையில், எங்க அம்மா கடைசியா தனுஷ் நடிப்பில் வெளியான திருவிளையாடல் படத்தில் அம்மா தனது கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு சூப்பரா இசையமைச்சிருக்க அப்படின்னு சொன்னதா என்னால மறக்கவே முடியாது. ஸ்டூடியோவில் அம்மா கூட இருக்கிற போட்டோஸ் எல்லாம் வச்சிருக்கேன். எங்க அம்மாவும் நானும் ஒரு மாதிரியா இருப்போம். நான் ரெக்கார்டிங் வேலையில் இருந்தபோது அம்மா இறந்துட்டாங்க, இதை என்னோட அப்பாவும் என்கிட்ட சொல்லல.

sivakarthikeyan imman

வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்ததுக்கப்புறம் தான் எனக்கு தெரிஞ்சுச்சு இதை கேட்டவுடன் நான் ரொம்பவுமே உடைஞ்சுட்டேன். அதுக்கப்புறம், அம்மாவோட போட்டோக்கு முன்னாடி நின்று அம்மா ஏன் எனக்கு மட்டும் இதெல்லாம் நடக்குதுன்னு கேட்டுட்டு இருந்தேன். நீங்க இருந்திருந்தால், எனக்கு இந்த மாதிரி விஷயங்கள் என் வாழ்க்கையில் நடந்திருக்காதுன்னு சொல்லி அழுது இருக்கேன். நீங்க ஒரு வேலை இங்கு இருந்தா எனக்கு நடந்த விஷயங்களை தட்டி கேட்டு இருப்பீங்கன்னு கதறி இருக்கிறேன் என்று இமான் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். சிலர் நமது வாழ்வில், இல்லை என்றால் அது இல்லை தான். அவர்களுக்கு நிகராக அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

  • GV Prakash and Saindhavi Divorce ஜிவி பிரகாஷ் உடன் கள்ளக்காதலா? சைந்தவிக்கு ஸ்கெட்ச்? பிரபல நடிகை பகீர்!
  • Copyright © 2025 Updatenews360
    Close menu