என் போனை கொடுக்குறேன்..செக் பண்ணி பாத்துக்கோங்க…டி.இமான் ஓபன் டாக்.!

Author: Selvan
12 March 2025, 2:05 pm

டி. இமான் தனிப்பட்ட வாழ்க்கை

தமிழ் சினிமாவில் தனித்துவமான இசையமைப்பாளராக திகழும் டி.இமான் விஸ்வாசம், மைனா, கும்கி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், மனம்கொத்தி பறவை, நம்ம வீட்டுப் பிள்ளை போன்ற பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களை கவர்ந்திருந்தாலும்,சமீப காலமாக பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார்.

D Imman lifestyle and habits

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில்,தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சில முக்கியமான கருத்துகளை பகிர்ந்துள்ளார்.”எனது செல்போனை யார் வேண்டுமானாலும் எடுத்துப் பார்க்கலாம்,எனது பாஸ்வேர்டுகள் எல்லோரிடமும் உள்ளது,புகைப்பிடிப்பது இல்லை, மதுவும் அருந்துவதில்லை,பெண்கள் விஷயத்திலும் நான் எந்த தவறும் செய்யவில்லை” என்று கூறியுள்ளார்.இது அவரது நேர்மையான வாழ்க்கை முறையை வெளிப்படுத்துகிறது.

இதையும் படியுங்க: போடு வெடிய..! OTT-யில் வியூஸை அள்ளும் குடும்பஸ்தன்..!

மேலும்,”எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் நான் படுத்தவுடன் தூங்கிவிட முடிகிறது,இது கோடிகள் பணம் வைத்திருந்தாலும் பலருக்கு கிடைக்காத ஒன்று,மனம் லேசாக இருந்தால் வாழ்க்கையில் எதுவும் சாதிக்கலாம்” எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த சில வருடமாக இவருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் பல வித சர்ச்சை பேசுச்சுகள் எழுந்த போதும் அதை பற்றி எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல் தன்னுடைய பாதையில் பயணித்து வருகிறார்.

  • Good Bad Ugly special premiere சர்ப்ரைஸ்.! ‘குட் பேட் அக்லி’ பட ரிலீஸில் ட்விஸ்ட்…தமிழில் இதுவே முதல்முறை.!
  • Leave a Reply