“DADA” படம் ஏற்கனவே வந்த கமல் படத்தின் காப்பியா ?.. டாடாவை பங்கம் பண்ணிய ப்ளூ சட்டை மாறன்..!
Author: Vignesh11 February 2023, 12:30 pm
பிக் பாஸ் மூலம் பிரபலமடைந்த கவின் தற்போது ஹீரோவாக டாடா என்ற படத்தில் நடித்து இருக்கிறார். பிக் பாஸுக்கு பிறகு அவர் நடிப்பில் வந்த லிப்ட் என்ற படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகி லிப்ட் படம் அவருக்கு பெரிதாக கைகொடுக்காத நிலையில், தற்போது அவர் ஹீரோவாக நடித்து இருக்கும் டாடா படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருக்கிறது.
டாடா படத்தில் அபர்ணாதாஸ், வி டிவி கணேஷ் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இதனிடையே, பிரபல திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் டாடா படத்தை குறித்து கடுமையாக விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
அதில் அவர், “களத்தூர் கண்ணம்மா படம் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளிவந்தது. அந்த படத்தின் கதையை அப்படியே டாடா படத்தில் எடுத்து வைத்துள்ளார்கள். டாடா படத்தை பார்க்கும் போது சீரியல் பார்ப்பது போல் இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.