தினமும் சரக்கு, சிக்கன் 65, சிகரெட்டும் வேணும் : ஆனா எல்லாத்தையும் மாத்தியது அந்த பெண்தான் : உச்ச நடிகர் ஓபன்!! !!!

Author: Udayachandran RadhaKrishnan
4 February 2023, 3:15 pm

தமிழ் சினிமாவையே ஆட்டிப்படைக்கும் உச்ச நடிகர் சொன்ன விஷயம்தான் தற்போது கோடம்பாக்கத்தின் ஹாட் டாப்பிக்காக போய்க்கொண்டிருக்கிறது.

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய சினிமாவிலேயே சூப்பர் ஸ்டார் என்று எந்தவொரு பிரபல நடிகரை கேட்டாலும் டக்கென ரஜினிகாந்தின் பெயரைத் தான் அனைவரும் சொல்வார்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு தென்னிந்திய திரை உலகில் மட்டுமின்றி பாலிவுட் திரையுலகிலும் மிகப்பெரிய மரியாதை இருக்கிறது என்பதும் பாலிவுட் திரையுலக நட்சத்திரங்கள் பலர் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டுமே என்றும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் தனது ஆரம்ப கட்ட வாழ்க்கையை குறித்து ஒரு நிகழ்ச்சியில் பேசிய ரஜினி, தான் கெட்ட பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததாகவும், அதுவும் தினமும் சரக்கு, சிக்கன் மற்றும் சிகரெட்டு கண்டிப்பாக இருக்க வேண்டும். பேருந்து நடத்துநராக இருக்கும் போது அப்படித்தான் இருந்தேன்.

பின்னர் சினிமாவில் நுழைந்தததும் காசு வந்தததும், அதையே தான் தொடர்ந்தேன், எப்படி நான் வெஜ் இல்லாமல இந்த வெஜிட்டேரியன்கள் இருக்காங்க என ஆச்சரியப்பட்டேன்.

ஆனால் இதையெல்லாவற்றையும் மாத்தியது அந்தபெண்தான், அவர் தான் மனைவி லதா என அந்த நிகழ்ச்சியில் அவர் பேசினார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?