குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டாலும் சில திரைப்படங்கள் மக்கள் மனதில் என்றும் நீங்காது இடம் பிடிக்கும். ஒப்பனைக்காக மிகக் குறைவான தொகையே ஒதுக்கப்பட்டு ஆனால் ஒப்பனைக்கான விருதை வென்ற படம் ஒன்று உண்டு.
டல்லாஸ் பையர்ஸ் கிளப் 2013 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க வாழ்க்கை வரலாற்று நாடகத் திரைப்படம். இது கிரேக் போர்டன் மற்றும் மெலிசா வாலாக் ஆகியோரால் எழுதப்பட்டு ஜீன்-மார்க் வல்லீயால் இயக்கப்பட்டது. 1980களின் நடுப்பகுதியில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ரான் உட்ரூஃப் என்ற கௌபாயின் கதையை இந்தத் திரைப்படம் சொல்கிறது. எச்ஐவி/எய்ட்ஸ் நோய்க்கான காரணம், சிகிச்சை இரண்டும் சரியாகப் புரிந்து கொள்ளப்படாத காலகட்டத்தில் சமூகத்தால் அவர்கள் எப்படிப்பட்ட களங்கத்திற்கு ஆளாகிறார்கள் என்பதை இப்படம் சொல்கிறது.
”டல்லாஸ் என்பது டெக்சாஸ் மாகாணத்திலுள்ள ஒரு நகரம்.திருநங்கைகள் எய்ட்ஸ் நோயாளிகள், ஆர்வலர்கள் மற்றும் மருத்துவர்களை நேர்காணல் செய்து இப்படம் உருவாக்கப்பட்டது.
இப்படத்திற்கான பட்ஜெட் மிகக் குறைவு. ஒப்பனைக்காக 250 அமெரிக்க டாலர்கள் ஒதுக்கப்பட்டது.
ஆயினும் இந்த திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த ஒப்பனை, மற்றும் சிறந்த படம் என்னும் 4 பிரிவுகளின் கீழ் ஆஸ்கார் விருதினை வென்றது.