தன்னைவிட 9 வயது குறைவான இயக்குநரை 39 வயதில் திருமணம் செய்து ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்ற நடன இயக்குநர்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 February 2022, 11:06 am

சினிமாவில் ஒரு பாடல் வெற்றி பெற இசையமைப்பாளருக்கு பெரும் பங்கு உண்டு என்றால், அந்த பாடலை பார்க்கும் பார்வையாளர்களை நடனமாடி வைக்க வேண்டிய பெரிய பொறுப்பு நடன இயக்குநர்களுக் உண்டு.

ஒரு ஜாலியான குத்து பாடல் என்றால் நிச்சயம் நடனம் ரசிகர்களை கவரவேண்டும். அப்படி தனது ஒவ்வொரு பாடலிலும் வித்தியாசமான நடனத்தை அமைத்து ரசிகர்களை கவர்ந்தவர் பிரபல நடன இயக்குநர் ஃபாராகான்.

Farah Khan on #MeToo in India: People jump to conclusion within hours; I  fear this 'trial by Twitter'-Entertainment News , Firstpost

இவர் வேறு யாருமில்லை. நண்பன் படத்தில் இருக்கானா இடுப்பிருக்கானா என்ற பாடலுக்கு நடனம் அமைத்தவர். பாலிவுட்டில் பிரபல நடன இயக்குநராக கலக்கி வரும் இவர், 1965ம் ஆண்டு பிறந்தார்.

Farah Khan: Known for my personality, not oomph factor

மும்பையை சேர்ந்த இவர், 1992ல் நடன இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றி பாலிவுட்டை தன்வசப்படுத்தினார். பின்னர் இருவர், மின்சார கனவு, அலைபாயுதே, நண்பன் உள்ளிட்ட ஒரு சில தமிழ் படங்களில் நடன இயக்குநராக பணியாற்றினார்.

Nanban (2012)

Koi Mil Gaya இந்தி திரைப்படத்தில் நடன இயக்குநராக பணியாற்றியதற்காக தேசிய விருது பெற்றார். பல படங்களில் சிறந்த நடனத்தை அமைத்ததற்காக ஃபிலிம் பேர் விருதுகளை பெற்ற இவர், குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுக்கு ஆஸ்தான நடன இயக்குநராக மாறினார்.

Farah Khan reveals how a wedding led to her own nuptials with Shirish Kunder

ஏராளமான சினிமா படங்களில் பணியாற்றி இவர், தனது 39 வயதில் தான் திருமணம் செய்தார். அதுவும் தன்னைவிட 9 வயது குறைந்த இளம் இயக்குநர் சிரிஷ் குந்தரை கடந்த 2004ம் ஆண்டு காதல் திருமணம் செய்தார்.

Farah's triplets turn 10

39 வயதில் திருமணமா? எப்படி குழந்தை? என எல்லா விமர்சனங்களையும் தட்டி தூக்கி எறிந்த இவருக்கு கடந்த 2008ம் ஆண்டு ஒரே பிரசவத்தில் 3 குழந்தை பிறந்தது. ஒரு மகன், இரு மகள்கள் என ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்ததை பாலிவுட்டே ஆச்சரியத்தில் பார்த்து வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

Farah Khan Kunder's daughters start an online party planning company |  Filmfare.com

தன்னைவிட 9 வயது குறைவான ஒரு நபரை திருமணம் செய்து வாழ்க்கைக்கு புதிய அத்தியாயத்தையே கொடுத்துள்ளார் நடன இயக்குநர் ஃபாராகான். இதே போல தமிழ் சினிமாவின் பிரபல நடன இயக்குநர் கலா மாஸ்டர் தனது 39 வயதில் திருமணம் செய்து குழந்தையை பெற்றெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1517

    0

    0