தமிழ் சினிமாவில் முன்னணி நடன இயக்குனராக இருந்து வருபவர் கலா மாஸ்டர். இவர் 12 வயதில் உதவி டான்ஸ் மாஸ்டராக இருந்து, தற்போது முன்னணி டான்ஸ் மாஸ்டராக பல ஹீரோக்களுடன் பணியாற்றி இருக்கிறார்.
சினிமாவில் மட்டுமல்லாமல் மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவராக இருந்து பல கலைஞர்களை உருவாக்கிய முக்கிய பங்காற்றியுள்ளார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவர் அவரின் நடன வகுப்பில் நடிகர் தனுஷ் சேர்ந்த விஷயத்தை பகிர்ந்து உள்ளார். அதாவது, நான் திருடா திருடி படத்தில் தனுசுக்கு டான்ஸ் சொல்லிக் கொடுக்க சென்றபோது என்னை பார்த்ததும் தனுஷ் மேடம் நான் தான் தனுஷ் என்று சொன்னதும் எனக்கு உங்களை தெரியும். உங்களுடைய படத்திற்காக தானே நான் வந்திருக்கிறேன் என்று சொன்னேன். பின் நான் உங்களின் டான்ஸ் கிளாஸில் டான்ஸ் கற்று இருக்கிறேன் என்று சொன்னார்.
நான் பார்த்திருக்கிறேன் என்று நானும் சொன்னேன். அதற்கு அப்போ நீங்க இவனெல்லாம் எங்க ஹீரோவாக போகிறான் என்று சொன்னீர்களே என்று சொன்னார். நான் அந்த மாதிரி உன்னை பற்றி ஒரு வார்த்தை கூட சொன்னது இல்லை. நானே குரூப் டான்ஸராக ஆக இருக்கும் போது எவ்வளவு அவமானங்கள் பட்டிருக்கிறேன்.
நான் யாரையும் இந்த மாதிரி சொல்ல மாட்டேன். நான் சொன்னதை நீ தப்பா புரிஞ்சுகிட்ட என்று தனுஷிடம் சொன்னேன். நேரடியாக தனுஷ் என்னிடம் இப்படி சொன்னதும் வருத்தமாக இருந்தது. அதன் பின் தான் நான் சொன்ன விளக்கத்திற்கு தனுஷ் நான் அந்த நேரத்தில் ரொம்ப ஒல்லியா இத்தனூண்டு இருப்பேன், அப்ப நீங்க உங்க மனதில் இவனெல்லாம் எங்கள் கதாநாயகனா வரப்போறார் என்று நினைத்திருப்பீர்கள் என்று நானே சொல்கிறேன் என்று சிரித்தபடி தனுஷ் என்னிடம் கூறி சென்றார் என்று கலா மாஸ்டர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.