‘மகள் மீது அவ்ளோ பாசம் இருந்தா இத செய்து இருக்கலாம்’.. ராபர்ட் மாஸ்டர் குறித்து பல உண்மைகளை சொன்ன பிரபல டான்ஸ் மாஸ்டர்..!
Author: Vignesh18 November 2022, 11:45 am
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான சில முகங்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் ராபர்ட் மாஸ்டர் ரசிகர்களுக்கு பரிட்சயமான ஒரு முகம் தான். ராபர்ட் மாஸ்டரை பற்றி வெளியில் தெரிவதற்கு அதிக காரணமாக இருந்தது வனிதாவின் விஷயத்தில் தான். இருவரும் காதலித்து வந்த நிலையில் வனிதாவின் பெயரை கூட தன் கையில் டாட்டூவாக குத்தி இருந்தார் ராபர்ட் மாஸ்டர். தற்போது இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார். மேலும், நிகழ்ச்சி தொடக்கத்திலிருந்து ராபர்ட் மாஸ்டருக்கு ரக்ஷிதாவின் மீது ஒரு கண் வைத்து இருக்கிறார்.
காதலுக்கு வயது இல்லை என்று சொல்லி கொண்டு அவர் செய்யும் சேட்டைகளுக்கு அளவே இல்லை. இவர், எனக்கு கேர்ள் பிரென்ட் இல்லை. அதனால் நம்முடைய இந்த நட்பு வெளியில் போயும் தொடர வேண்டும் என்றெல்லாம் ரக்ஷிதாவிடம் கூறியிருந்தார்.அதற்கு ரக்ஷிதா, நம்ம உள்ள வந்து சில நாட்கள் தானே ஆகிறது. பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு சூதனமாக தப்பித்து விட்டார். பின் ரக்ஷிதா என்ன செய்தாலுமே அதை மாஸ்டர் பார்த்து ரசித்துக் கொண்டே இருக்கிறார்.
ரச்சிதாவிடம் வழியும் ராபர்ட் :
தனக்கு காதலியே இல்லை எண்டு சொன்ன ராபர்ட் மாஸ்டர் தனக்கு வெளியில் ஒரு காதலி இருக்கிறார் என்று கூறி இருந்தார். அதோடு தனுக்கு திருமணம் ஆகி ஒரு மகள் இருக்கிறார் என்றும் தன் மனைவி தன்னை விட்டு சென்றுவிட்டார் என்றும் தன் மகளுக்கு நான் தான் அப்பா என்று தெரியாது தன்னை Uncle என்று தான் அழைக்கிறார் என்றும் கூறி இருந்தார். இத்தனை இருந்தும் ரஷிதாவிடம் ராபர்ட் மாஸ்டர் தொடர்ந்து வழிந்துகொன்டு தான் வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட ரட்சிதாவின் கையை பிடித்துக் கொண்டு நானும் உனக்கு அண்ணன் தானே அப்போது நீ எனக்கு முத்தம் கொடு என்று ரட்சிதாவிடம் கேட்டார்.அதற்கு ரஷிதா, நான் கையில் கூட முத்தம் கொடுக்க மாட்டேன். நான் அண்ணனுக்கு முத்தம் கொடுக்க மாட்டேன். கையெடுத்து கும்பிடுவேன் என்றார் இதை தொடர்ந்து ராபர்ட் மாஸ்டர் அவள் தான் என்னை அண்ணனாக பார்க்கிறாள். நான் அவளை கிரஷ்ஷாக தான் பார்க்கிறேன். அவளுக்கு உண்மையில் என் மீது எந்த ஃபீலிங்கும் இல்லை என்றால் நான் அண்ணன் என்று சொன்னதும் எனக்கு கையில் முத்தம் கொடுத்து இருப்பாள்.
டான்ஸ் மாஸ்டர் ராதிகா :
பரவாயில்லை அவள் என்னை எப்படி வேண்டுமானாலும் பார்க்கட்டும் நான் அவளை கிரிஸ்ஸாக தான் பார்க்கிறேன் என்று கூறியிருந்தார். இப்படி ராபர்ட்டின் பெயர் தொடர்ந்து டேமேஜ் ஆகி வரும் நிலையில் பிரபல டான்ஸ் மாஸ்டர் ராதிகா ராபர்ட் குறித்து பல உண்மைகளை கூறி இறுக்கிறார். அதில், ராபர்ட் நல்ல திறமைசாளி தான் ஆனால், ரச்சிதாவுடன் trpகாக தான் இதையெல்லாம் செய்கிறார்கள்.
ராபர்ட்டின் மகள் :
ஆனால்,ரச்சிதா இந்த விஷயத்தை மிகவும் அழகாக கையாண்டு வருகிறார்.ராபர்ட் மாஸ்டர் தன் மகள் குறித்து பேசுவதை பார்க்கும் போது சந்தோஷமாகத்தான் இருந்தது ஆனால் பிக் பாஸ் போய் தான் அவர் மகளைப் பற்றி சொல்ல வேண்டுமா அவசியம் இல்லை அவர் மகள் எங்கே இருக்கிறார் என்பது அவருக்கு தெரியும் நேரில் போய் சென்று சொல்லி இருக்கலாம், மாதா மாதம் எதாவது பணம் அனுப்பி இருக்கலாம் என்று கூறியுள்ளார் ராதிகா.